Breaking News Tamil LIVE: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே உடனுக்குடன் காணலாம்.
காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கல்லணை நாளை மாலை திறப்பு..
செஸ் ஒலிம்பியாட் : மாமல்லபுரம் பகுதியில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் பதிவு செய்ய கால அவகாசம் ஜூன் 27 வரை நீட்டிப்பு
செஸ் ஒலிம்பியாட் : பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை அறிவித்துள்ளது அம்மாநில அரசு.
இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையோட்டி, மாநில அரசு சார்பில் 5 பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் கூவம் ஆற்றில் படகில் சென்று ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருவதையெடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவரை வரவேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.
ஆர்.என்.ரவி தனது டிவிட்டரில், ”மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர். “ என்று பதிவு செய்துள்ளார்.
சென்னை மாமல்ல புரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற 160க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 303 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 168 அணிகளும், மகளிர் பிரிவில் 135 அணிகளும் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை இன்று நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திடங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி மாலை 5.30 மணிக்கு ஹைதரபாத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வருகிறார். இங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கம் செல்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் நாளை விருப்பமனு தாக்கல் செய்கின்றனர்.
2022-2023 கல்வியாண்டில் பள்ளிகள் வரும் ஜூன் 13 ஆம் தேதி திறக்க உள்ள நிலையில், பள்ளிகளுக்கு 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தாயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க 3.35 கோடி புத்தகங்களும், மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,120ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ,4,838 ஆக விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 41,312 ஆகவும், கிராமுக்கு ரூ. 5,164 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.66க்கு விற்பனையாகிறது.
சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் இது தொடர்பான விசாரணை தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள வட்டாச்சியர் அலுவலகங்களில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராம சந்திரன் உத்திவிட்டுள்ளார். வட்டாட்சியர் அலுவலகங்களில் மக்களின் சேவைகளை தணிக்கை செய்யுமாறு அமைச்சர் உத்திரவிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டதையெடுத்து அமைச்சரிடமிருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி சென்னை வருவதை அடுத்து சென்னையில் ட்ரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
விசா முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகியுள்ளார்.
சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக விலை மாற்றமின்றி விற்கப்படும் பெட்ரோல், டீசல்விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் ₨102.63க்கும், டீசல் ₨94.24க்கும் விற்பனை
சென்னையில் பா.ஜ.க. நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் 4 ரவுடிகளை தனிப்படை போலீசார் சேலம் மாவட்டம் எடப்பாடியில் கைது செய்துள்ளனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல் பசவராஜ் பொம்மை ஆகியோரும் பங்கேற்கின்றனர். மேலும், மத்திய அமைச்சர்கள் 5 பேரும் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு இன்று சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Background
திமுக அரசு பொறுப்பேற்று முதன் முறையாக நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் நீட் தேர்வு விலக்கு தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்கவுள்ளார்.
ஏற்கனவே, டெல்லி சென்று பிரதமரை சந்தித்தப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், ஆளுநர் நீட் விலக்கு சட்ட முன் வடிவை மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதை குறிப்பிட்டு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளார்.
நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருக்கிறார். அதன்படி, நாளை மாலை 5.30 மணிக்கு ஹைதரபாத்தில் இருந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கம் வருகிறார்.
அங்கு 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.
மதுரை – தேனி அகல ரயில் பாதை, தாம்பரம் – செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை, எண்ணூர் – செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் – பெங்களூரு இடையே குழாய் வழியே இயற்கை எரிவாயு எடுத்து செல்லும் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும், சென்னை பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பையும் திறந்து வைக்கும் பிரதமர் மோடி, சென்னை – பெங்களூரு விரைவு சாலை, சென்னை துறைமுகம் முதல் – மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட பாலம், ஓசூர் – தர்மபுரி, மீன்சுருட்டி – சிதம்பரம் நெடுஞ்சாலை பணிகள் ஆகியவற்றிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டம், திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்கா உள்ளிட்ட திட்டங்களுக்கும் பிரதமர் மோடி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடியோடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -