Breaking LIVE:கோவை ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு, இந்தியா,உலகம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனுக்குடன் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 30 May 2022 09:35 PM
கோவை ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் உழல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆவினில் பணியாற்றும் 20 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய, உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை ஹவாலா பண மோசடி புகாரில் சற்றுமுன் கைது செய்துள்ளது.  

12ம் வகுப்பு வேதியியல் தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படுகிறது

12ம் வகுப்பு  பொதுத் தேர்வில் வேதியியல் பாடத்தில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே பீமனோடை வடிகால் வாய்க்காலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சுமார் 4.5 கி.மீ தூரத்திற்கு நடைபெற்று வரும் தூர்வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய அரசியல் 8 ஆண்டுகளில் மாறியுள்ளது -  ஜெ.பி. நட்டா

இந்திய அரசியல்  கலாசாரம் 8 ஆண்டுகளில் மாறியுள்ளது. சேவை, நல்லாட்சி, ஏழை, நலன் இதுவே அரசின் செயல்பாடு. மோடி அரசின் ஆன்மா -


ஜெ.பி. நட்டா


பிரதமர் மோடி இருக்கிறார். எதுவும் நடத்தி முடிக்கப்படும் என்ற நேர்மறையான நிலை உருவாகியுள்ளது. - ஜெ.பி. நட்டா


 


 

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை- டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை ஜீன் 3ஆம் தேதி வரை கைது செய்ய, அமலாக்கத்துறைக்கு தடை விதித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு மீது, ஜீன் 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகங்களில் ஆய்வு தொடரும்- முதலமைச்சர் ஸ்டாலின்

அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில், பணியாற்ற வேண்டியது, அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிபடுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்களுக்காகத்தான் அரசு, மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு என முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.





கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கம்

மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  494 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகளை முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை உள்பட இன்று 18 மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பு. 

கமுதி அருகே தபால் அலுவலகத்தில் கொள்ளை முயற்சி.!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள அபிராமத்தில் செயல்பட்டு வரும்,  தபால் நிலையத்தில்  பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள்  கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரொக்கப்பணம், ஆவணங்கள் என பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொள்ளை முயற்சி குறித்து அபிராமம் போலீசார் விசாரணை செய்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க திருச்சி திமுக கூட்டத்தில் தீர்மானம்

திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் ப.சிதம்பரம்

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

நேபாள விமான விபத்து - 14 உடல்கள் மீட்பு

நேபாள விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த 22 பேரில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,685 ஆக குறைவு!

இந்தியாவில் ஒருநாளில் 2,685 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 25 பேர் பலி..!

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரேநாளில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

நேபாளத்தில் தொலைந்துபோன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு!

நேபாள மலை பகுதிகளில் நேற்று காலை சென்ற விமானம் மாயமான நிலையில் இன்று காலை பாகங்களாக கண்டறியப்பட்டதாக நேபாள விமானம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொடைக்கானல் 59 ஆவது மலர்க்கண்காட்சி நிறைவு!

கொடைக்கானலில் 59 ஆவது மலர்க்கண்காட்சி  நிறைவு பெற்றது என்றும், மொத்தம் ஆறு நாட்கள் நடந்த கண்காட்சியை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்ததாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

உலகளவில் 53.15 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில் இதுவரை 53.15 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு, அதில் 50.23 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இந்த கொடிய தொற்றால் 63.10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

மாநிலங்களவை தேர்தல் - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று வேட்புமனு

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று பகல் 12 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். 

மதுரையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்..!

மதுரை மாநகராட்சியில் தூய்மை மற்றும் பொறியியல் பிரிவை சேர்ந்த 6 ஆயிரம் பேர் இன்று முதல் வேலைநிறுத்தம். 

ஜூன் 1, 2 ல் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு..

அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜூன் 1 மற்றும் 2 ம் தேதிகளில் ஆய்வு நடத்த இருக்கிறார். இதுகுறித்து சென்னை தலைமைசெயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசிக்கிறார். 

Background

பெட்ரோல், டீசல் விலை


பெட்ரோல்,  டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை. கலால் விலை குறைக்கப்பட்ட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 9வது நாளாக விலை மாற்றமின்றின்றி விற்கப்படுகிறது. அதன்படி,இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, பரபரவென ஏறிய பெட்ரோல் விலை ரூ.110 தாண்டி சென்றுகொண்டிருந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறியது. சாமனியர்களை பெருமளவில்  பாதிக்கும் பெட்ரோல் டீசல்விலையை குறைக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன்காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. 



கலால் வரி குறைப்பு


முன்னதாக, இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பெட்ரோல் விலை ரூபாய்க்கும் 8-ம், டீசல் விலை ரூபாய்க்கும் 6-ம் கலால் வரியை குறைத்துள்ளதாக அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக ஏறி வந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அவதியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் 3 குறைத்து பெட்ரோல் விலையை ரூபாய் 100க்கு கீழ் கொண்டு வந்தது. ஆனாலும், மீண்டும் விலை ஏறியதன் விளைவாக சென்னையில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் விலை ரூபாய் 110க்கு விற்பனையாகி வந்தது


விலை குறைக்கப்படுமா?


இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்ததால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். இந்த விலை குறைப்பு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். பெட்ரோல் விலை ஏற்றத்தால் பால், டீ உள்ளிட்ட சில பொருட்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையை குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனனர்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.