Breaking LIVE: டி.ராஜேந்தர் உடல்நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு, இந்தியா,உலகம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனுக்குடன் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 29 May 2022 12:58 PM
டி.ராஜேந்தர் உடல்நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

நேபாளம் நாட்டில் நடுவானில் காணாமல் போன நேபாள விமானம்!

போஹ்ராவிலிருந்து (Pokhara)  ஜாம்சோம் (Jomsom) நகருக்கு 22 பயணிகளுடன் புறப்பட்ட Tara Air's 9 NAET என்ற  விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது, காலை 9.55 மணிக்கு கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணித்த 19 பயணிகளில் 4 பேர் இந்தியர்கள் எனத் தகவல்.

எல்.முருகனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

தெரு பெயரில் ஜாதிப் பெயர்களை நீக்கும் பணி தொடக்கம்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில்  சென்னை மாநகராட்சியில் தெரு பெயரில் உள்ள ஜாதிப்பெயர்களை நீக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளதாக தகவல்.

உலகளவில் 53.12 கோடி பேருக்கு கொரோனா

 


உலகில் 53.12 கோடி பேருக்கு கொரோனா; 63.10 லட்சம் பேர் உயிரிழப்பு; 50.17 கோடி பேர் குணமடைந்தனர்

கோவை ஆனந்தாஸ் உணவகங்களில் 2வது நாளாக ரெய்டு

கோவை ஆனந்தாஸ் உணவக குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

8ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 8வது நாளாக விலைமாற்றமின்றி ஒருலிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.

ஜூன் 23இல் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்?

 


தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஜூன் மாதம் 23ம் தேதி வெளியிடப்படும் என தகவல்

Background

யாரும் யாருக்கும் எதிரி இல்லை என கருணாநிதி சிலை திறப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார். 


சென்னை, ஓமந்தூரரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அவரது சிலையின் கீழ் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளது. அவை பின்வருமாறு :


வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம். 
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.


இவை அனைத்தும் கருணாநிதியின் பொன்மொழிகள் ஆகும். இதையடுத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். 









வெவ்வேறு சித்தாந்தங்களில் கட்சிகள் கட்டமைக்கப்பட்டாலும் அவரவர் பாணியில் அவர்கள் மக்களுக்காகதான் பணியாற்றுகிறார்கள் என்பதை மறக்க கூடாது. அதனால் யாரும் யாருக்கும் எதிரிகள் இல்லை. நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. என் மொழிக்கு ஆதரவானவன். தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது நாட்டின் சிறப்பு” எனத் தெரிவித்தார். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.