Breaking News Tamil LIVE: ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு : விடுதலை செய்யக்கோரி சாந்தன் ஆளுநருக்கு கடிதம்..
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE

Background
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். நேற்று மதுரையில் அவர் பல்வேறு நலதிட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தினார். அத்துடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் நூலக பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் வரவு - செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறை குழுவுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக்கோயில் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்கோயிலில் புகார்கள் எழும்போது இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கோயிலுக்கு சென்று விசாரிக்கலாம். மடியிலே கனமில்லை என்றால், வழியிலே பயமில்லை என்பார்கள். எந்தவிதமான பிரச்சினை இல்லை என்றால் ஆய்வு செய்ய வருபவர்களுக்கு ஒத்துழைப்புதான் மனுநீதி, மனுதர்மம் ஆகும். உரிய சட்டத்தின்படி வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் அறநிலையத்துறையின் குழுவினர் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்கள். சட்டத்தை மீறி எந்தவிதமான செயலிலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறோம்” என்று கூறினார்.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்வது தொடர்பாக சட்ட ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோயிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்பட்டு, பக்தர்களின் புகார் தொடர்பாக நிச்சயம் விசாரணை மேற்கொள்ளப்படும்” எனவும் அமைச்சர் கூறினார்.
இதனிடையே, அறநிலையத்துறை கேள்விகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மாலை 4 மணிக்கு பதிலளிக்கின்றனர். காலையில் ஆய்வுக்கு ஒத்துழைப்பு தர மறுத்த நிலையில் மாலையில் வழக்கறிஞர் மூலம் பதில் அளிக்க இருக்கின்றனர்.
உதய சூரியன் சின்னத்தை முடக்க வேண்டும்... தேர்தல் ஆணையத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
பிராமணர்களுக்கு எதிராக செயல்படுவதால், திமுக கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து, உதய சூரியன் சின்னத்தை முடக்க வேண்டும்...
தேர்தல் ஆணையத்திற்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு : விடுதலை செய்யக்கோரி சாந்தன் ஆளுநருக்கு கடிதம்..
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு : விடுதலை செய்யக்கோரி சாந்தன் ஆளுநருக்கு கடிதம்..
24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணை
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவிப்பு!
மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் டெஸ்ட், டி20 உள்ளிட்ட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.
கோயிலுக்காக முறைகேடாக பண வசூலித்த வழக்கு - யூடியூபர் கார்த்திக் கோபிநாத்-க்கு ஜாமீன்
அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் பெரியரில் ரூ. 36 லட்சம் வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத்-க்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
’ஆப்ரேஷன் கந்துவட்டி’- கந்துவட்டி புகார்களை விரைந்து விசாரிக்க புதிய நடைமுறை அமல்!
கந்துவட்டி தொடர்பான வழக்குகளை விசாரிக்க ‘ஆப்ரேஷன் கந்துவட்டி’ என்ற சிறப்பு இயக்கம் தொடக்கம். கந்துவட்டி கொடுகைகள் தொடர்பான புகார்களை விரைந்து விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவு.
மக்கள் நலப் பணியாளர்களின் பணி நியமனம்- உச்ச நீதிமன்றம் விளக்கம்!
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் அரசின் கொள்கை முடிவில் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பிர்ச்சினை ஏதும் என்றால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. பணி நியமன விவாகாரத்தில் அரசின் புதிய முடிவை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்கலாம்; இதில் விருப்பம் இல்லாதாவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு உள்ளது என்றும், அரசின் முடிவை ஏற்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயலில் அறநிலையத்துறை அதிகாரிகள் குழு 2-வது நாளாக ஆய்வு!
சிதம்பரம் நடராஜர் கோயலின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தற்காக 5 பேர் கொண்ட குழு அமைப்பட்டது. நேற்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆய்வு நடைபெறவில்லை. இரண்டாவது நாளான இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் குழு கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இவர்களுடன் காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளும் உடன் வந்திருப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழ்க அரசின் முடிவிற்கு தடை இல்லை- உச்சநீதிமன்றம்
1989-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில், வேலையில்லாமல் இருந்த 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையெடுத்து அடுத்தடுத்த வந்த ஆட்சியில் ஆட்சியில் அவர்களுக்கு பணி வழங்குவது, பணியிலிருந்து நீக்குவதும் தொடர்ந்தது. கடந்த 2011 ம் ஆண்டில் 13500 மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்க்கப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை கருத்தில்கொண்டு, திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழ்க அரசின் முடிவிற்கு தடை இல்லை- உச்சநீதிமன்றம்
1989-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில், வேலையில்லாமல் இருந்த 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையெடுத்து அடுத்தடுத்த வந்த ஆட்சியில் ஆட்சியில் அவர்களுக்கு பணி வழங்குவது, பணியிலிருந்து நீக்குவதும் தொடர்ந்தது. கடந்த 2011 ம் ஆண்டில் 13500 மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்க்கப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை கருத்தில்கொண்டு, திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்வு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்வு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம்- தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்வு!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,160 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.4,770 ஆக விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ. 68 ஆக விற்பனையாகிறது.
கொரோனா - 7 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 7 பேர் உயிரிழந்தனர் - மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா நிலவரம்
இந்தியாவில் ஒரே நாளில் 5233 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை
Breaking News Tamil LIVE: சிவகங்கையில் நல திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கையில் நல திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
Breaking News Tamil LIVE: உள்துறை அமைச்சகத்தில் நள்ளிரவில் தீ விபத்து
டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Breaking News Tamil LIVE: சாலை அமைப்பதில் புதிய கின்னஸ் சாதனை படைத்த நெடுஞ்சாலைத்துறை
குறுகிய நேரத்தில் 75 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை அமைத்து மத்திய நெடுஞ்சாலைத்துறை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
Breaking News Tamil LIVE: சொகுசு விடுதிகளில் எம்.எல்.ஏக்கள் தங்க வைப்பு
மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான்,ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Breaking News Tamil LIVE: பிரதமர் மோடி வரும் 21ஆம் தேதி மைசூரு பயணம்
வரும் 21ஆம் தேதி பிரதமர் மோடி மைசூரு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
Breaking News Tamil LIVE: வீடு கட்டும் இடத்தில் ஐம்பொன் சிலைகள்
திருவாரூர் மாவட்டத்தில் வீடு கட்டும் இடத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
Breaking News Tamil LIVE: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு
மேகதாது அணை விவகாரத்தை காவிரி நதிநீர் ஆணையத்தில் விவாதிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
Breaking News Tamil LIVE: எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் சமூக நலத்துறைக்கு மாற்றம்
எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் சமூக நலத்துறைக்கு மாற்றம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
Breaking News Tamil LIVE: மதுரையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரையில் நல திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.