Breaking News Tamil LIVE: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவுக்கு ஜூன் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

’’மாணவர்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அரசின் இலவச மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 

கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த மையங்கள் செயல்பட உள்ளன. 

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் - ஜூலை 19, 2022.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் ஒதுக்கப்படும் நாள் - 22.07.2022

சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு நாட்கள் - 20.07.2022 முதல் 31.07.2022 வரை

தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 08.08.2022

சேவை மையம் வாயிலாகக் குறைகளை நிவர்த்தி செய்தல்- 09.08.2022 முதல் 14.08.2022

சிறப்புக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக)

* மாற்றுத்திறனாளி 
* முன்னாள் படை வீரர்‌ 
* விளையாட்டு 
ஆகிய 3 பிரிவினருக்கும் 16.08.2022 முதல் 18.08.2022 வரை கலந்தாய்வு

பொதுக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக)

* பொதுக்கல்வி 
* தொழில்முறைக் கல்வி 
* அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீடு 
ஆகிய 3 பிரிவினருக்கும் 22.08.2022 முதல் 14.10.2022 வரை கலந்தாய்வு

துணைக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக) - 15.10.2022 & 16.10.2022

எஸ்‌.சி.ஏ காலியிடம்‌ எஸ்‌.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு (இணையதள வாயிலாக) - 17.10.2022 & 18.10.2022

கலந்தாய்வு இறுதி நாள் - 18.10.2022 

விரைவில் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

சென்ற ஆண்டு வசூலிக்கப்பட்ட அதே கட்டணமே, இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கு வசூலிக்கப்படும். கொரோனா காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடைபெறத் தாமதம் ஆகியுள்ளது. விரைவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும்’’. 

இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
13:59 PM (IST)  •  09 Jun 2022

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

13:25 PM (IST)  •  09 Jun 2022

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் - சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் துவக்க விழா நடைபெறுகிறது.

44-வது செர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா நேரு உள் விளையாட்டில் நடத்த முடிவு. மேலும், மாமமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

13:10 PM (IST)  •  09 Jun 2022

அரசு பள்ளிகளிலேயே LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்...

இதற்கென தனி சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்துள்ளார்.

 

13:05 PM (IST)  •  09 Jun 2022

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. யூ.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பலதரபினரின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து இனிஅரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

12:48 PM (IST)  •  09 Jun 2022

5 சவரன் நகைக்கடன்- 100% தள்ளுபடி என அரசு அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் அல்லது 5 சவரனுக்கு கீழ் வழங்கப்பட்ட  நகைக்கடன்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 14.40 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

12:10 PM (IST)  •  09 Jun 2022

எம்.பி. பதவியிலிருந்து விலகினார் பசில் ராஜபக்சே!

இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சரும், மகிந்த ராஜபக்சே சகோதரருமான பசில் ராஜபக்சே  தனது எம்.பி.  பதவியை ராஜிமாமா செய்வதாக அறிவித்துள்ளார். இலங்கையில் நிகழும் கடும் பொருளாதார நெருக்கடி நிலையில் போரட்டங்கள் வெடித்து வருகிறது. இந்நிலையில், இனிமேல் நான் எந்த அரசியல் பதவிகளையும் வகிக்க மாட்டேன் என்றும், இனி அரசியலில் ஈடுபட போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

11:37 AM (IST)  •  09 Jun 2022

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் - இன்று மாலை வெளியாகும் அறிவிப்பு

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பை இன்று மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. 

11:20 AM (IST)  •  09 Jun 2022

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்- முதலமைச்சர் ஆலோசனை!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 ஆம் தேதி முதல் நடக்கிறது. இதன் தொடக்க விழா குறித்து ஆலோசனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, ஒலிம்பியாட் சிறப்பு அதிகாரி தாரேஷ் தலைமையில் இன்று ஆலோசனை கூட்ட நடைபெறுகிறது.

11:14 AM (IST)  •  09 Jun 2022

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூபாய் 200 உயர்வு

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 795க்கும், சவரன் தங்கம் ரூபாய் 200 உயர்ந்து ரூபாய் 38 ஆயிரத்து 160க்கும் விற்கப்படுகிறது.  

10:15 AM (IST)  •  09 Jun 2022

சென்னையில் என்ஐஏ அலுவலர்கள் அதிரடி சோதனைா

சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட 8 இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

09:18 AM (IST)  •  09 Jun 2022

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோவை வெளியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோவை இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்

08:03 AM (IST)  •  09 Jun 2022

தமிழ்நாட்டில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை..!

சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 இடங்களில் டெல்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.