Breaking News Tamil LIVE: கலை மக்களுக்கானது. கலையில் மூடநம்பிக்கையை விதைக்கக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
துரத்தும் வைரஸ்.. கேரளத்தில் பரவத் தொடங்கியது கொடிய நோரோ வைரஸ்..
திரைப்படப் பாடல்களை பாடும் அளவுக்குதான் எனக்கு இசை ஆர்வம் - முதலமைச்சர் ஸ்டாலின்
கலை மக்களுக்கானது. கலையில் மூடநம்பிக்கையை விதைக்கக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 107இல் இருந்து 90ஆக குறைந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 836இல் இருந்து 862 ஆக உயர்ந்தது. 64 பேர் குணமடைந்தனர். சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 43இல் இருந்து 48 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூர் ஊத்துக்குளி அருகே பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
விக்ரம் திரைப்படம் உலக அளவில் 150 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இந்தியாவில் 100 கோடி வசூலை தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு : குற்றவாளி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ்-க்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சார்தாம் புனித யாத்திரைக்கு சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,200 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,785 ஆக விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு ரூ.68.50 ஆக விற்பனையாகிறது.
கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் - வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல்
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Background
சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் சிலம்ப விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:
''இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 12ஆம் வகுப்பு வரை படித்த தன்னார்வலர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கலாம் என்று வரையறுக்கப்பட்டு இருந்தது. மலைப் பிரதேசங்களில் பன்னிரண்டாம் வகுப்பு என்ற கல்வித் தகுதியைப் பத்தாம் வகுப்பு என்று தளர்த்த முடிவெடுத்துள்ளோம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் எல்லாம் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகளை எழுதாத மாணவர்கள் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வுகளை எழுத வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறை தீரும்..
பொதுத்தேர்வுகளை எழுத வராத மாணவர்களை அப்படியே விட்டு விடக்கூடாது என்பதி உறுதியாக உள்ளோம். இதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தனி நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்துள்ளோம். தேர்வுகளை எழுத மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து உடனடியாக ஜூன் மாதத்தில், ஜூலை மாதத்தில் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வை எழுத வைக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளோம்.
'உடனடியாகப் பள்ளிக்கு வந்து தேர்வை எழுதுங்கள்'
எனினும் மாணவர்கள் ஏன் வரவில்லை என்ற காரணத்தைக் கண்டறிய வேண்டியது எங்களின் கடமை. அந்தப் பணியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுத் தேர்வுகளை எழுத வராத மாணவர்கள், உடனடியாகப் பள்ளிக்கு வந்து தேர்வை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளி மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் சுகாதார துறையிடம் இருந்து இதுவரை வரவில்லை. முதலமைச்சர் அலுவலகம் அளிக்கும் அறிவுறுத்தலை நாங்கள் பின்பற்றுவோம்’’.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -