Breaking News Tamil LIVE: தமிழக அரசின் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் உத்தரவு

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு, இந்தியா,உலகம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனுக்குடன் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 02 Jun 2022 05:45 PM
ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி..!

நீட் விலக்கு கோரும் சட்டமுன்முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியதற்கு ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 21 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.ரன். ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.


- கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான சந்திப்பில் முதல்வர் வலியுறுத்தல்

இளையாஜாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 


இளையராஜா தனது 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. 

தமிழக அரசின் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் - முதல்வர் உத்தரவு

தமிழக அரசின் அறிவிப்புகளை குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட நிதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் வசதி, ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

ஆளுநர் ஆர்.என் ரவியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

ஆளுநர் ஆர்.என் ரவியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று..

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று..

ஜூன் 23 ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்

ஜூன் 23 ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றாக அறிவித்துள்ளனர். 

தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது..!

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது. உட்கட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து பொருளாளர் பிரேமலதா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..!

வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,080ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ,4,760ஆக விற்பனையாகிறது.


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41,272 ரூபாயாகவும், கிராம் 5,159 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை நிலவரம்:


சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 67  ரூபாயாக விற்பனையாகிறது.

மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரியம் அமைப்பு

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து அரசாணை வெளியீடு

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3000 ஐ கடந்தது..!

இந்தியாவில் ஒரேநாளில் 3, 712 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

திட்டங்களின் நிலை - முதலமைச்சர் முக ஸ்டாலின் 2வது நாளாக ஆலோசனை

அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின்  2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். 

6.79 லட்சம் பேர் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை

10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத 6.79 லட்சம் மாணவர்கள் துணைத்தேர்வு எழுத தேர்வர்கள் இயக்ககம் நடவடிக்கை. பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களை துணை தேர்வில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சீனாவில் நிலநடுக்கம் - 4 பேர் உயிரிழப்பு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழப்பு.

சென்னையில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்..!

கருணாநிதி பிறந்த நாளையொட்டி சென்னையில் நாளை மலர் கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

அமெரிக்கா மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி

அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு. 

Background

சென்னையில் நேற்று இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. 


இது தொடர்பாக தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில், “ சென்னை நுங்கம்பாகத்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கான வெப்பநிலையும், மீனம்பாக்கத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் அளவிற்கான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்ப நிலையானது வரும் காலத்தில் தொடரலாம் அல்லது அதிகரிக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் இன்று வேறு எந்த பகுதியிலும் பதிவாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலையானது இந்த வருடத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்பது குறிப்பிடத்தக்கது.






கடந்த மே மாதத்தில் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. இதனையடுத்து ஆந்திர பிரதேசத்தில் அசானி புயல் தாக்கியதால் தமிழ்நாட்டிலும் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டிலும் மழை நீடித்தது. சென்னையிலும் சில இடங்களில் மழை பெய்தது.


ஆனால் கடந்த 3 நாட்களாக சென்னையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த 3 நாட்களில் சென்னையில் பல்வேறு இடங்களில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சில பகுதிகளில் 37 -38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த ஆண்டிலேயே இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக சென்னையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.