Breaking News Tamil LIVE:”தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை”- சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு, இந்தியா,உலகம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் உடனுக்குடன் தகவல்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்ததாக கூறப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடை விதிக்க கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூன் 3 ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்திருந்தனர்.
263 சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்ததாக கூறப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடை விதிக்க கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூன் 3 ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்திருந்தனர்.
தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்பை பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அள்வித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் முகத்தில் கொப்பளங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை நோயா என்ற சந்தேகம் எழுந்தநிலையில், அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்திரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே ஜூன் 2-ஆம் தேதி ஆஜராக உத்திரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.38,480 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ,4,810 ஆக விற்பனையாகிறது.
கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை.
Background
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை. கலால் விலை குறைக்கப்பட்ட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 13ஆவது நாளாக விலை மாற்றமின்றின்றி விற்கப்படுகிறது. அதன்படி, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, பரபரவென ஏறிய பெட்ரோல் விலை ரூ.110 தாண்டி சென்றுகொண்டிருந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறியது. சாமனியர்களை பெருமளவில் பாதிக்கும் பெட்ரோல் டீசல்விலையை குறைக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன்காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது.
கலால் வரி குறைப்பு
முன்னதாக, இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பெட்ரோல் விலை ரூபாய்க்கும் 8-ம், டீசல் விலை ரூபாய்க்கும் 6-ம் கலால் வரியை குறைத்துள்ளதாக அறிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக ஏறி வந்தது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அவதியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் 3 குறைத்து பெட்ரோல் விலையை ரூபாய் 100க்கு கீழ் கொண்டு வந்தது. ஆனாலும், மீண்டும் விலை ஏறியதன் விளைவாக சென்னையில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் விலை ரூபாய் 110க்கு விற்பனையாகி வந்தது.
விலை குறைக்கப்படுமா?
இந்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்ததால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர். இந்த விலை குறைப்பு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். பெட்ரோல் விலை ஏற்றத்தால் பால், டீ உள்ளிட்ட சில பொருட்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையை குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -