Breaking News Tamil LIVE: ”நாங்கள்தான் உண்மையா அதிமுக” : தேர்தல் ஆணையத்திடம் செல்கிறது ஓ.பி.எஸ் தரப்பு..
கொரோனா தொற்றால் இதுவரை மொத்தம் 63.41 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
”நாங்கள்தான் உண்மையா அதிமுக” : தேர்தல் ஆணையத்திடம் செல்கிறது ஓ.பி.எஸ் தரப்பு..
பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனு நாளை விசாரணை - உரிமையியல் நீதிமன்றம் விசாரணை.
அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது. பொதுமக்களின் நலன் கருதி சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது - ஓபிஎஸ் மனு
ஓ.பி.எஸ்ஸைச் சந்திக்கிறார் ஓ.ராஜா.. சசிகலாவை சந்தித்தால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் ஓ.ராஜா
அதிமுகவில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டாம் என்று ஓபிஎஸ் நினைக்கிறாரா? - ஜெயக்குமார் கேள்வி
அதிமுக பொதுக்குழு நடத்த 2000 பேர் கடிதம் - ஜெயக்குமார்
நாளை மறுநாள் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்போருக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஸ் வழங்கப்படுகிறது.
வீட்டிற்கு வெளியே காத்திருந்த அதிமுக தொண்டர்களை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சந்தித்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்தான விவகாரம் இருக்கும் நிலையில் தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்
அம்மா பேரவை சார்பில் இபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஆர்.பி. உதயகுமார். அதிமுக நிர்வாகிகளின் மனநிறைவை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் நிறைவேற்றி வருவதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் 17 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரேநாளில் 7,293 பேர் குணமடைந்துள்ளனர். 79,313 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
மேகாதாது அணை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு இன்று இரவு டெல்லி செல்கிறது. ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நாளை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது என வலியுறுத்த உள்ளனர்.
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கான தனித் தீர்மானம் இன்று (ஜூன்.21) இறுதி செய்யப்படுவதாகவும், தீர்மானக் குழுக் கூட்டம் இன்று காலை அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளி வைக்குமாறு ஓபிஎஸ் கடிதம் எழுதிய நிலையில், இபிஎஸ் தரப்பு கூட்டத்தை நடத்துவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டத்தைப் புறக்கணிப்பது குறித்து ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தி வருவதாகவும், எதிர்ப்பை மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வம் ஆயத்தமாகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திமுக எம்.பி கனிமொழிக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளி வைக்குமாறு அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், 2600க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களில் 2300க்கும் அதிகமானோர் கூட்டம் நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Background
உலகில் இதுவரை மொத்தம் 54.47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை மொத்தம் 63.41 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 52 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்ச பாதிப்பு
முன்னதாக அமெரிக்காவில் ஒரே நாளில் 33,590 பேருக்கும், அதிகபட்சமாக பிரேசிலில் 51,825 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் 226 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது.
இந்தியாவில் மீண்டும் உயரும் ஒரு நாள் பாதிப்பு
ஜூன் 18ஆம் தேதி மட்டும், இந்தியாவில் ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் மேல் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 113 நாள்களுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
நேற்று (ஜூன்.20) மொத்தம் 12 ஆயிரத்து 871 பேருக்கு இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 9 ஆயிரத்து 473ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 873ஆக அதிகரித்துள்ளது.
இணை நோய் பாதிப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு மே 4ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடிகளைக் கடந்தது. 2021ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி 3 கோடிகளையும், 2022 ஜனவரி 25ஆம் தேதி 4 கோடிகளையும் கடந்தது.
இதில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான உயிரிழப்புகள் இணை நோய் காரணமாக ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால், கொரோனா நான்காம் அலை குறித்த அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.
மன நல பாதிப்பு
இந்த நிலையில், கொரோனாவால் உலக அளவில் இதுவரை மொத்தம் 100 கோடி பேருக்கு மனநலப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பு முன்னதாக ஆய்வு ஒன்றை மேற்கொண்ட நிலையில், தற்போது இத்தகவல் வெளியாகி உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -