Breaking News Tamil LIVE: விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை- சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றலாம் என மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினர். அப்பொழுது ஒரு தரப்பினர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். 

மேலும் ஒரு சிலர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரி முழக்கமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

அதன்பிறகு, ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பேசினார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் “ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பேசினார்கள். அதிமுக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்ப்பார்ப்பது ஒற்றைத்தலைமை தான். அந்த ஒற்றைத்தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும். யார் ஒற்றை தலைமையாக வருவார்கள் என்பது சஸ்பென்ஸ். சசிகலா யார்? அவரைப்பற்றி ஏன் விவாதிக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதை பெரும்பாலான நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.” எனத் தெரிவித்தார்.

பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக இப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஆரோக்கியமான முறையில் பெரும்பாலான தலைமைக்கழக நிர்வாகிகள், பெரும்பாலான மாவட்ட கழக செயலாளர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

அந்த ஒற்றை தலைமை பொறுப்புக்கு யார் வருவார்கள் என்பது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. அதுகுறித்து கட்சி முடிவு செய்யும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாமறைவிற்கு பிறகு, இரட்டை தலைமை என்ற முறையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதிமுகவில் அன்று இருந்த காலம் வேறு. இப்பொழுது இருக்கும் காலம் வேறு. இன்றைய காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் ஒற்றை தலைமை கோரிக்கை வைக்கப்பட்டது என தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
17:32 PM (IST)  •  15 Jun 2022

விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை- சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்

கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்றும், அதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என்றும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.ராஜசேகர் மரணத்திற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தம் இல்லை என சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

15:45 PM (IST)  •  15 Jun 2022

டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜீன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மேகதாது விவகாரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்க கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது

11:54 AM (IST)  •  15 Jun 2022

அதிமுகவில் ஒற்றைத்தலைமை; எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!

அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வருவது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

11:45 AM (IST)  •  15 Jun 2022

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் - மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார். 

11:38 AM (IST)  •  15 Jun 2022

குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

11:25 AM (IST)  •  15 Jun 2022

ஒற்றை தலைமை விவகாரம் : கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். 

09:57 AM (IST)  •  15 Jun 2022

Breaking News Tamil LIVE: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 8,822 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 8,822 பேர் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,32,36,695லிருந்து 4,32,45,517 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,24, 792 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50,548 இல் இருந்து 53,637 ஆக அதிகரித்துள்ளது. 

08:17 AM (IST)  •  15 Jun 2022

எம்ஜிஎம் குழும இடங்களில் வருமானவரி சோதனை..!

எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய 40க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர். 

07:27 AM (IST)  •  15 Jun 2022

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சாதனை

பின்லாந்தில் பாவோ நர்மி விளையாட்டு போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனது முந்தைய சாதனையை முறியடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

07:23 AM (IST)  •  15 Jun 2022

மாநில கல்வி கொள்கை : முதலமைச்சர் இன்று ஆலோசனை

மாநில கல்வி கொள்கையை வடிவமைத்த அமைக்கப்பட்ட 13 பேர் குழுவினருடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். 

07:20 AM (IST)  •  15 Jun 2022

முடிந்த தடைகாலம்.. கடலுக்கு திரும்பிய மீனவர்கள்..!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகாலம் முடிந்ததையடுத்து, விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 

07:18 AM (IST)  •  15 Jun 2022

25 வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் 25 வது நாளாக விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.