Breaking News Tamil LIVE: அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கருத்து முன்வைக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், காமராஜ், வைத்திலிங்கம், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை.மக்களுக்கான சேவைகளை தாமதமின்றி உடனே வழங்க வருவாய்த்துறையினருக்கு முதல்வர் அறிவுரை. தகுதியில்லாதோருக்கு குடும்ப அட்டை கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அட்டை கோருவோருக்கு காலவரையறை நியமித்து உரிய பரிசீனை செய்து தரவேண்டும் எனவும் அறிவுருத்தியுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு. பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் கூறிய நிலையில், மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
“வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும்” அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களின் முழக்கத்தால் சலசலப்பு
திருவண்ணாமலையில் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான தடை நீங்கியது
*திருவண்ணாமலையில் கருணாநிதியின் சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கு வாபஸ்
*மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கருணாநிதிக்கு திருவண்ணாமலையில் சிலை வைக்கப்படுவதை எதிர்த்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் வரும் 16 ஆம் தேதி முதல் அடுத்த 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிமுக தலைமை அலுவலத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
Background
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
தருமபுரி மாவட்டம், மாதேஅள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தேர் சரிந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மனோகரன்(57), சரவணன்(50) ஆகிய இருவரும் முன்னதாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
திருவிழாவின் முக்கிய நாளில் நடந்த சோகம்
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கோயில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நாளான இன்று (ஜூன்.13) தேர் ஊர்வலம் நடைபெற்றது.
--------------------------
கமல்ஹாசன் நற்பணி இயக்க நண்பர்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் ’கமல்ஸ் பிளட் கம்யூன்’ என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
திரையில் இருந்தாலும் தலைவர் தான்...
அதன் தொடக்க விழாவை இன்று காலை 11 மணியளவில், மநீம கட்சியின் தலைமை அலுவலகத்தில் மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ”மீண்டும் நடிக்க போய்விட்டேன் என்கிறார்கள், சிறையில் இருந்தால் தான் தலைவர் என்று இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான்.
படத்தின் வெற்றியைக் கொண்டாட நான் இங்கே வரவில்லை, இது ஒரு படிக்கட்டு. நான் அதில் ஏறி போய்க்கொண்டு இருக்கிறேன். 40 ஆண்டுகளாக இதை செய்து கொண்டிருக்கிறேன்.
வைராக்கியம் குறையவில்லை
என்னுடைய வைராக்கியம் குறையவில்லை, என் படங்களில் தொடர்ந்து அரசியல், சமூக சேவை குறித்த விஷயங்கள் வந்து கொண்டிருக்கும். என்ன நடிக்க விட்டீங்கனா நான் 300 கோடி சம்பாதிப்பேன் என்று சொன்னால் அவர் ஏதோ மார் தட்டுகிறார்னு சொன்னார்கள். இதோ இப்போ வந்து கொண்டு இருக்கிறது.
நான் என் கடனையெல்லாம் அடைப்பேன், என் சாப்பாட்டுக்கு வயிறாற சாப்பிடுவேன். என் உறவுகளுக்கு நண்பர்களுக்கு கொடுக்க முடிந்ததை கொடுப்பேன்.
அதற்குப் பிறகு இல்லையென்றால் இல்லை என்று சொல்லுவேன். எனக்கு வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை. மனிதனாக இருப்பது போதுமானது. இல்லாதபோது கொடுத்ததா சொல்லி எதுக்கு நடிக்கணும்.
இது தான் எங்கள் அரசியல்...
நன்றாக நடப்பவரை இடறிவிடுவது எங்கள் அரசியல் இல்லை. தடுக்கி விழுந்தால் தூசி தட்டி எழுந்துவிட்டு, தடுக்கி விட்டவரை ஓரமாக நிற்க சொல்லிவிட்டு எங்கள் வழியில் நாங்கள் போய்க்கொண்டே இருப்போம்” எனத் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் படம் மூலம், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலில் இருந்து சினிமாவுக்கு கமல்ஹாசன் மீண்டும் திரும்பியுள்ளார். கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான மாஸ் ஹீரோக்களின் படங்கள் எதுவும் செய்யாத சாதனையை இப்படம் நிகழ்த்தி வருகிறது.
300 கோடி கிளப்பில் இணைந்த விக்ரம்
விக்ரம் படம் வெளியாகி 11 நாள்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படம் உலகம் முழுவதும் 310 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -