Breaking News Tamil LIVE:காமராஜர் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது- தீயணைப்பு படையினர் விரைந்தனர்.
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காமராஜர் சாலையில் கண்ணகி சிலை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மயிலாப்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயினை அணைத்தனர்.
தமிழ்நாட்டில் நேற்று 249 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 255 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 1456.74 புள்ளிகள் குறைந்து 52,846.70 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 427.40 புள்ளிகள் குறைந்து 15,774.40 புள்ளிகளாக உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணமடைந்தது குறித்து மாநில மனித ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை மாநகர ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பாஸ்கரன் உத்தரவு
காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை. ”காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு, அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தி IFS நியமனம்.
தற்போது தலைவராக இருக்கும் உதயன் IFS, வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனராக நியமனம்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனராக தீபக் பில்கி IFS, நியமனம் செய்து வனத்துறை செயலர் உத்தரவு.
இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..
ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. சனாதனம் பற்றி பேசிய அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொண்டாற்ற போக வேண்டும்
நேஷனல் ஹெரால்டு விவகாரம் : ராகுல் காந்தியிடம் 2 மணிநேரமாக விசாரணை நடைபெறுகிறது
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இரத்த வங்கி துவக்கும் திட்டத்தை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்துள்ளார்
பள்ளி வளாகங்களில் உள்ள கழிவறை தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குடிநீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு, சுத்தமான குடிநீர் வழங்குவதை கண்காணியுங்கள்
ஆசிரியர், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்
வெங்கட் பிரபு படத்துக்கான இசை பணிகளை துவங்கிய இளையராஜா - கங்கை அமரன் தகவல்
அரசு பள்ளியில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களோடு மாணவராக இருந்து ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனித்தார்.
படிக்காமலே சாதிக்கலாம் என யாராவது கூறினால், அது எரிச்சலில் வரும் வார்த்தைதான் - முதலமைச்சர் ஸ்டாலின்
இந்தியாவை வழிநடத்துவது அரசியல் அமைப்பு சட்டம்தான்.. சனாதனம் அல்ல... ஆளுநர் பேச்சுக்கு வைகோ கண்டனம்
கற்பிப்பிப்பதில் புதிய யுக்தி தேவை என்பதற்காகவே இந்தத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இந்தத்திட்டத்திற்காக தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் நோக்கம்
-முதல்வர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் பேசிய பேச்சுக்களுக்கு எம்.பி டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Corona Update : இந்தியாவில் இன்று ஒரேநாளில், 8,084 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று.. 10 பேர் தொற்றால் உயிரிழப்பு
National Herald : நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் ராகுல் காந்தி
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று விலையில்லா பாடப்புத்தகங்கள் போன்றவற்றை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு
Background
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தலைமைச் செயலராக டாக்டர் பி.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இவர் அதே துறையில் சிறப்புச் செயலராகப் பணியாற்றி வந்தார்.
37 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். எனினும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் 37 ஐஏஎஸ் அதிகாரிகளைத் தமிழக அரசு நேற்று அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்தது. அந்த வரிசையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக அந்த பதவியில் டாக்டர். பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றங்கள் என்னென்ன
கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த முகமது நசீமுதீன், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக தாரேஷ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை ஆணையராக எல்.நிர்மல் குமாரும், வணிக வரிகள் துறை ஆணையராக தீரஜ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்ணியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் குமார் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
யார் இந்த செந்தில் குமார் ஐஏஎஸ்?
1968ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தவர் செந்தில் குமார். பி.எஸ்சி., வேளாண் படிப்பை முடித்த இவர், அதே துறையில் முதுகலைப் படிப்பை முடித்தார். தொடர்ந்து பூச்சியியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்ற இவர் டென்மார்க், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொது நிர்வாகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
இவர் 1995 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். விழுப்புரம் கூடுதல் ஆட்சியர், திண்டுக்கல் ஆட்சியர், அரியலூர் ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை செந்தில் குமார் வகித்துள்ளார்.
முன்னதாக 2017ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு முதன்மைச் செயலாலராக / 3ஆவது செயலராக பி.செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதேபோல மக்கள் மற்றும் மறுவாழ்வு நலத்துறை பொறுப்பு தலைமைச் செயலாளராகவும் செந்தில் குமார் இருந்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -