Breaking News Tamil LIVE: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், நாளை சரத் பவார் சந்திப்பு

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 11 Jun 2022 09:09 PM
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், நாளை சரத் பவார் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், நாளை சரத் பவார் சந்திப்பு

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கு: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் கைது

சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில், கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திருமங்கலம் முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலிசார் கைது செய்தனர்.


திருமங்கலத்தில் சொத்துக்காக தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் சரவணன் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது மதுரவாயல் பகுதியில் தன் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் அமல்..!

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டம் 2021. சட்டத்தை அமல்படுத்த சுகாதாரத்துறை கூடுதல் செயலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு 

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா : முதல்வர் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். 

அமைச்சர் தேர் இழுக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம்!

குமாரகோயில் தேர் திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் இழுக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம். 

ஜார்கண்ட் வன்முறையில் 2 பேர் உயிரிழப்பு

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த வன்முறையில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் உயிரிழப்பு. 

கட்சி மாறி ஓட்டு கேட்ட பாஜக எம்எல்ஏ சஸ்பெண்ட்!

ராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி பாஜக எம்எல்ஏ ஷோபாரானி குஷ்வாகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு 

ஆற்காடு வீராசாமி நலம்! ஒருமையில் விளாசிய கலாநிதி வீராசாமி - வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!

ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறுதலாக கருத்து தெரிவித்த அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். 

விலையில் மாற்றம் உண்டா? இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Background

காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் (நேற்று) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய 16 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.


ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் போட்டியிட்ட நான்கு இடங்களில் 3 இடங்களை கைப்பற்றியது. கர்நாடகாவில் பாஜக மூன்று இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. விதிகளை மீறியதாகக் கூறி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. 










மாநில வாரியாக வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ: 


ராஜஸ்தான் :


காங்கிரஸ் - பிரமோத் திவாரி, ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக்


பாஜக - கன்ஷ்யாம் திவாரி


மகாராஷ்டிரா வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு 


ஹரியானா : வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு 


கர்நாடகா :


பாஜக - நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹர் சிங் சிரோயா


காங்கிரஸ் - ஜெய்ராம் ரமேஷ் 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.