Breaking News Tamil LIVE: ராசிபுரத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவிப்பு

இன்றளவும் உலக நாடுகள் திணறி வரும் நிலையில் ஓமிக்ரான் வகை கொரோனா குறிப்பாக BA4 மற்றும் BA வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 12 Jun 2022 07:27 PM
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு- விசாரணை நடத்த முடிவு

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி  ராஜசேகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல்.  இவரது மரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

அரசு, தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை!

பள்ளிகளில் புதிதாக சேர வரும் 8-ஆம் வகுப்பு மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் இல்லாவிட்டாலும் அவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

மாற்றுச்சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது என்று பள்ளி கல்வித் துறை வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 5,8, 10, மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தாமதமின்றி மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை வலியுறுத்து உள்ளது.

கூட்டுறவு - உணவு - நுகர்வோர் துறை முதன்மைச் செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர்  ராதாகிருஷ்ணன்,  கூட்டுறவு - உணவு - நுகர்வோர் துறை முதன்மை செயலாளராக  பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

ராசிபுரத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவிப்பு

ராசிபுரத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.





அதிமுக பொதுக்குழு கூட்டம் - ஓ.பன்னீர் செல்வம் , எடப்பாடி பழனிச்சாமி 14-ஆம் தேதி ஆலோசனை!

அ.தி.மு.க. கட்சியில் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளது.  இது தொடர்பாக,  நாளை மறுநாள் (14.06.2022) கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி  இருவரும் ஆலோசனை நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.  எம்ஜிஆர் மாளிகையில் 14ம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண்மாக, தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, கோவை, நீலகரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பில், “ அடுத்த ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், வரும் காலங்களில் நிலக்கரி தடுப்பாடு எழாமல் இருப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவகிறது. என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு!

தமிழ்நாட்டின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வட சென்னையில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

Breaking News Tamil LIVE:  ஜூன் 14 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஜூன் 14 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23 ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கூட உள்ளதை முன்னிட்டு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கூடுதலாக 1,450 பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

கல்லூரிகள், பள்ளிகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், சொந்த ஊருக்குச் செனறவர்கள் சென்னை உள்ளிட்ட பிற ஊருக்கு திரும்புவதற்கு கூடுதலாக 1,450 பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை, திருச்சி, சேலம் ,மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா...ஒரே நாளில் 8,582 பேர் பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 8,582 பேர் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,32,13,435லிருந்து 4,32,22,017 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,48,308 இல் இருந்து 4,26,52, 743 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,24, 761 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40.370 இல் இருந்து 44, 513 ஆக அதிகரித்துள்ளது. 

’சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி’ - ஓ. பன்னீர்செல்வம்

சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சியாக விளங்குவது அதிமுக தான் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காணும் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

’சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி’ - ஓ. பன்னீர்செல்வம்

சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சியாக விளங்குவது அதிமுக தான் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காணும் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Background

உலகளவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 


சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக உலகமே சிக்கித்தவித்து கொஞ்சம் கொஞ்சமாக மீள தொடங்கியிருக்கிறது. இந்த 2 ஆண்டுக் காலக்கட்டத்தில் நாம் சந்தித்த இழப்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. பொருளாதார, மனித இழப்புகள் என இந்த பேரிடர் மனித குலத்திற்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது. 


கொரோனா முதல் அலையின் அச்சம் மற்றும் விழிப்புணர்வு காரணமாக இரண்டாம் அலையில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் மாஸ்க் அணிவது அவசியம் என உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய,மாநில சுகாதாரத்துறை வலியிறுத்தியதால் அதனை உணர்ந்து நாம் அனைவரும் இன்றளவும் மாஸ்க் பயன்பாட்டை பின்பற்றி வருகிறோம். அதேபோல் கொரோனாவுக்கு தடுப்பூசி போட தயங்கிய மக்கள் அதன்பின் இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி நோயிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள தொடங்கினர்.


இதனிடையே உருமாற்றம் அடைந்த கொரோனா தொடர்ந்து கண்டறியப்பட்டாலும் அது முந்தைய அளவைப் போல பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இதனை சமாளிக்க இன்றளவும் உலக நாடுகள் திணறி வரும் நிலையில் ஓமிக்ரான் வகை கொரோனா குறிப்பாக BA4 மற்றும் BA வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வகை கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக மாறியுள்ளது.


அதன்படி இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54.01 கோடியாக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் 63.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் 51.27 கோடி போர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 39,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் வடகொரியாவில் 42,810, ஜெர்மனியில் 44,642, பிரேசிலில் 32,332 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.