Breaking LIVE:அதிகமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி- ஓபிஎஸ்

Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் அடுத்த 24 மணிநேரத்தில் நடைபெற இருக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 23 Jul 2022 03:37 PM
அதிகமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி- ஓபிஎஸ்

அதிகமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நாளை குருப்-4 தேர்வு - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளை குருப்-4  தேர்வு நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது 

மேற்கு வங்க அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை..!

மேற்குவங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக நடந்த முறைகேடு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைதானார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முக்கு திமுக எம்.பி.க்கள் நேரில் வாழ்த்து

இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி.திரவுபதி முர்மு அவர்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். 

மின்சாரம் தாக்கி ஊர் காவல்படை காவலர் உயிரிழப்பு..!

தஞ்சாவூர் அய்யம்பேட்டை அருகே வேம்பங்குடி கிராமத்தில் மின்சாரம் தாக்கி  ஊர் காவல்படை காவலர் மதன் உயிரிழப்பு

Breaking LIVE: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்..!

இலங்கை கடற்படை கைது செய்த 6 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

என் நெஞ்சார்ந்த் நன்றி... தேசிய விருது தேர்வுக்கு பின் நன்றி தெரிவித்த சூர்யா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் நடிகர் சூர்யா, ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகளவில் 57.34 கோடி பேருக்கு கொரோனா..!

உலகளவில் இதுவரை 57.34 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் 54.33 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இந்த கொடிய தொற்றினால் 64.01 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி : இந்திய அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

சென்னை முழுவதும் பரவலாக மழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது.

Background

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.


இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 63வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 


அதன்படி இன்று ( ஜூலை 22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.