Breaking LIVE: TNPSC குருப் 1 தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
TNPSC குருப் 1 தேர்வுக்கான தரவரிசைப் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது
அதிமுக அலுவகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.
மின் கட்டண உயர்வு, விலை வாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்சனைகளை எதிர்த்து அதிமுக வரும் 25 ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தவுள்ளது - ஈபிஎஸ்
ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன். 15 நாட்களுக்கு பொன்னேரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, கைதான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிடை மாற்றம். கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியராக ஸ்ரவன் குமார் நியமனம்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடற்கூராய்வு தொடங்கியது. மறு உடற்கூராய்வுக்கு தற்போது வரை மாணவியின் பெற்றோர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை விழுப்புரம் கீதா அஞ்சலி, திருச்சி ஜூலியானா ஜெயந்தி, சேலம் கோகுலநாதன், மூன்று நபர்களை கொண்ட மருத்துகுழுவினர். மறு உடற்கூறு ஆய்வு செய்ய தொடங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆக பகலவன் நியமனம். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய செல்வகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
சில்லறையில் விற்கப்படும் அரிசி,கோதுமை மாவு, கம்பு, ரவை உள்ளிட்ட பொருட்கள் மீதான 5% ஜிஎஸ்டி வரி ரத்து - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அதிமுகவின் துணை எதிர்க்கட்சித்தலைவராக ஆர்.பி. உதயகுமார் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று ஆர்.பி. உதயகுமார் நேரில் சந்திப்பு.
அதிமுகவின் அமைப்புச்செயலாளராக வரகூர் அருணாசலம் நியமனம் - எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் , பிண கூராய்வு அறையில் இருந்து எக்ஸ்ரே ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை தொடர்ந்து, கலவரம் நிகழ்ந்த பள்ளியில் தடயவியல் குழு ஆய்வு.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சட்டப்படியே முடிவு எடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு உத்தரவு.
பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என காவல்துறை நீதிமன்றத்தில் முறையிட்டதற்கு, அவரது பெற்றோர் இல்லாமலே மறுகூராய்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி. பெற்றோர் வந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கரூர், நாமக்கல், திருப்பத்தூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் கூராய்வு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கும் - மருத்துவமனை டீன்
எதிர்க்கட்சித் துணைதலைவர் தொடர்பாக அதிமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. ஜனநாயக ரீதியாக முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு விளக்கம்
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல். நாடாளுமன்றத்தில் வேட்பு மனு தாக்கலின் போது ராகுல் காந்தி, சரத் பவார் ஆகியோர் உடனிருந்தனர்.
எதிர்க்கட்சி துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம். கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்ந்தெடுத்ததாக ஈபிஎஸ் அறிவிப்பு
ஓபிஎஸ் அவர்களை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமனம் செய்ததாக ஈபிஸ் அறிவிப்பு.
ஈபிஎஸ் தரப்பில் இருப்பவரை அதிமுக எதிர்க்கட்சித் துணை தலைவராக நியமிக்க, அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி சபாநாயகர் அலுவலகத்திற்கு கடிதம்.
எதிர்க்கட்சித் துணைதலைவராக இருந்த ஓபிஎஸ், கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து ஈபிஎஸ் தரப்பால் நீக்கப்பட்டார். எதிர்க்கட்சித் துணைதலைவரை மாற்றுவது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் வழங்கியது அதிமுக.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்ள சென்னை வருமாறு பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பிதல். டி.ஆர்.பாலு , கனிமொழி ஆகியோர் பிரதமருக்கு நேரில் அழைப்பிதல் விடுத்தனர்.
விசாரணை அலுவலராக உயர்கல்வித்துறை துணைச் செயலர் தனசேகர், விஜயலட்சுமி ஆகியோர் நியமனம். இந்த குழு ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - அமைச்சர் பொன்முடி
பெரியார் பல்கலைக்கழக முதுநிலை தேர்வில் சாதிரீதியான கேள்வி இடம் பெற்ற விவகாரம் - விசாரணை நடத்த குழு அமைப்பு.
பணவீக்கம், விலை வாசி உயர்வு ஆகிய பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சி அமளி எழுப்பிய நிலையில் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு.
புதுச்சேரியில் மேலும் 245 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 1220 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பணவீக்கம், விலை வாசி உயர்வு ஆகிய பிரச்சனைகளை எழுப்பி எதிர்கட்சி அமளி. அதனால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு.
மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கண்டனத்துக்குறியது. கொரோனாவல் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரி சுமை - ஈபிஎஸ்
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் மீது நம்பிக்கை இல்லையா என மனுதாரர் தரப்பை நோக்கி உச்சநீதிமன்றம் கேள்வி.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் கூராய்வுக்கு தடையில்லை. மாணவியின் தந்தை ராமலிங்கத்தின் மேல் முறையீட்டை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம், கலவரம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். ராஜபக்ச கட்சி சார்பாக போட்டியிடும் துலாஸ் அலகபெருமவுக்கு தனது ஆதரவினை அவர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் 2வது நாளாக விசாரணை - ஸ்ரீமதியின் உடல் மறுகூராய்வு செய்யப்படவுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சிகிச்சைகாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், 2 ஆசிரியர்கள் ஆகிய 5 பேருக்கும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - 5 பேரும் சேலம் சிறையிலடைக்கப்பட்டனர்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக அலுவலகம் மோதல் தொடர்பான வழக்கில் ஒபிஎஸ் ஆதரவாளர்களிடம் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் ஸ்கீட் பிரிவு துப்பாக்கிச் சுடுதலில் 46 வயதான மைராஜ் அகமது கான் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் 4வது சுற்றுக்கு ரிஷி சுனக் முன்னேறினார் .
மேற்கு வங்க ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக இல.கணேசன் ஏற்றார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீஷ் தன்கர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் குரங்கம்மை நோய் பாதிப்பு காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை.
பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வந்த 5 நாட்கள் வரை கால அவகாசம் நீட்டிப்பு.
தமிழ்நாட்டில் விரைவில் மின் கட்டணம் மாற்றம் அமலுக்கு வரும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.
Background
சென்னையில் 59வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 59வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று ( ஜூலை 19) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -