Breaking LIVE: ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி கூடுதுறையில் இறங்கத் தடை

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

முகேஷ் Last Updated: 02 Aug 2022 04:54 PM
Aadiperukku : ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி கூடுதுறையில் இறங்கத் தடை

Aadiperukku : ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி கூடுதுறையில் இறங்கத் தடை 

தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை 

ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் 

50 லட்சம் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் இயக்கம் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

50 லட்சம் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் இயக்கத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 லட்சம் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கு

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். 

இபிஎஸ் வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்

எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் வடக்கிழக்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் ரெய்டு..!

சினிமா பைனான்சியர் அன்பு செழியனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

4 மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு எச்சரிக்கை..!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

மாலத்தீவு அதிபர் இன்று டெல்லி வருகை..!

மாலத்தீவு அதிபர் முகமது சாலிக் இன்று டெல்லிக்கு வருகை புரிந்து குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அல்கொய்தா தலைவர் கொலையா..? பைடன் விளக்கம்!

அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி, காபூலில் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர்

Background

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில்  கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


கிட்டதட்ட 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் மாற்றம் கண்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. 


இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 73வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட் 2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.