Breaking LIVE: 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக திமுக சீராய்வு மனு
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
தேசிய கல்விக்கொள்கை நிச்சயம் புதிய மாற்றத்தை கொண்டுவரும் என ஆளுநர் ரவி பேசியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று ஒரே நாளில் இதுவரை 8,480 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல்பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக திமுக சீராய்வு மனு தொடர்ந்துள்ளது.
அரசிய சாசன அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கான சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் - சென்னை விமான நிலையம் இடையேயான சாலை, ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்ய, விமான நிலையங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் ஜனவரி 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கள்ளழகர் கோயில் நிலத்தை 34 கோடி ரூபாய்க்கு விற்பதாகக் கூறி மோசடி செய்த கொடைக்கானல் பாஜக நிர்வாகி சதீஷ்குமார் கைது
ஒடிசா அருகே வங்கக்கடலில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடல் தரையில் இருந்து 10 கி.மீ ஆழ்த்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் டிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவாகியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வங்கக்கடலில் உருவாக உள்ள புதிய புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கலவரம் நிகழ்ந்த கனியாமூர் தனியார் பள்ளி சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. உயர் நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து 144 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளி திறப்பு.
குஜராத் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிச.01ஆம் தேதி 89 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இன்று 14 மாவட்டங்களைச் சேர்ந்த 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
திருவள்ளூரில் கலவரப்பேட்டை அருகே தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் பள்ளியில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம். 9-12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல உள்ள நிலையில் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் பள்ளியில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம். 9-12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல உள்ள நிலையில் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் பள்ளியில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம். 9-12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல உள்ள நிலையில் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு.
ஜி 20 மாநாடு தொடர்பாக டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், நாகை மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 2ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 93 தொகுதிகளில் நடைபெறுகிறது. அகமதாபாத், காந்தி நகர், வதோதரா உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 90 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
Background
தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும் இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என்றும், பிறகு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி வடதமிழகம்- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டிருந்தது
அதேசமயம் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, டிசம்பர் 6 ஆம் தேதி வரை இலேசானது முதல் மிதமானது வரை மழை செய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதால் தமிழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி கனமழைக்கும், 8 ஆம் தேதி மிக கன மழைக்கும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை பெய்யுமா?
வானிலை மைய அறிக்கைப்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
05.12.2022: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
06.12.2022: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
07.12.2022: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
08.12.2022: தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர – தமிழக கடலோரப்பகுதிகள், வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -