Breaking LIVE: குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடக்கம்-இஸ்ரோ தலைவர் சோம்நாத்
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
கடலூர்: சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞரை முதலை இழுத்துச் சென்றதால் பரபரப்பு. வடக்கு வேளக்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் திருமலையை தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழாவின் எல்லை தெய்வமான பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாடவீதியுலா நடைபெற்று வருகிறது.
கோவையில் வாகன சோதனையின்போது காரில் கடத்திய 350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
ஸ்பெயினில் நடக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் பைனலுக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
“சரியான நேரத்தில் நீதி கிடைக்க நமது நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் மக்களிடம் இணக்கமாக நடப்பதும் ஆளும் அதிகாரத்தின் முக்கிய வேலை” என உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்த அரசியல் சாசன தினக் கொண்டாட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் வரும் 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை மாநகரப் பேருந்துகளில் ஒலிப்பெருக்கி மூலம் அடுத்த நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டம் அமலுக்கும் வந்தது.
குன்றத்தூர், கூடுவாஞ்சேரி, வண்டலூர் செல்லும் வழித்தட பேருந்துகளில் இந்தத் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
"கடைகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும். இதுவரை இரண்டு குப்பை தொட்டிகளை வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் ரூ.1.04 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது" என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
"நமது அரசியல் சாசனமே நமது மிகப்பெரிய பலம்; இளைஞர்கள் அதிக அளவில் பங்கு கொண்டு இந்திய அரசியலமைப்பை வலுப்படுத்த வேண்டும்" என டெல்லியில் நடந்த அரசியல் சாசன தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வின் கைப்பாவையாக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சீனாவில் ஒரேநாளில் 35ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சீனா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதுக்கும் அதிர்ச்சி அளிக்கு தகவலாக உள்ளது.
மங்களூரில் குக்கர் வெடி விபத்தில் கைது செய்யப்பட்ட ஷாரிக், மதுரையில் தங்கியிருந்ததையடுத்து நேதாஜி நகரில் உள்ள விடுதியில் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னையில் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.67.50 ஆக விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.67,500 ஆக விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 39,400ஆக விற்பனையாகிறது.
தங்கச்சிமடம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடுக்கடலிலே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சென்னை, கவுரிவாக்கத்தில் நகைக்கடையில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையனை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் போலீசார் மீட்டனர்.
அசாம் - மேகாலயா இடையேயான எல்லைப் பிரச்சனையால் மேகாலயாவின் 7 மாவட்டங்களில் 48 மணி நேரமாக இணைய சேவை அம்மாநில அரசால் முடக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட சேவைகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Background
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 180 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை:
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 189வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (நவம்பர்.26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
2025 இலக்கு:
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -