Breaking LIVE: பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி  வைத்தார் முதல்வர்

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 23 Nov 2022 01:37 PM
தமிழக ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்த போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், அதற்கு பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டாக கூறி குற்றம்சாட்டியுள்ளார். 

ஆளுநருடன் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சந்திப்பு

சென்னை கிண்டியில் ஆளுநர் ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமி சந்திப்பு 

பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி  வைத்தார் முதல்வர்

சென்னை கொளத்தூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்.

இலங்கை தமிழர்கள் மேலும் 10 பேர் வருகை 

இலங்கை மன்னாரில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 10 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வருகை 

செங்கல்பட்டில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் தாமதம்- பயணிகள் அவதி

செங்கல்பட்டில், அரக்கோணம்-காஞ்சிபுரம் வழிதடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இன்றைய தங்க விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து  ரூ.39,080 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.4,885 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது

விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி

விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் மட்டும் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்ட்ராவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் வடக்கே இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Background

தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 185வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 







சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 180 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.

 

பெட்ரோல், டீசல் விலை:






கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.









இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..? 





கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.




 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


2025 இலக்கு:


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.