Breaking LIVE : குஜராத் மாநில சட்ட பேரவை முதற்கட்ட தேர்தல் நிறைவு...57.60 சதவீத வாக்குப்பதிவு
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தல் முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 57.60 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாக, இந்திய அரசின் அகில இந்திய வானொலி தெரிவித்துள்ளது
சென்னையில் வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு முழு வேலைநாள் என முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அஃப்தாப் அமீனுக்கு உண்மை கண்டறியும் சோதனை டெல்லியில் நிறைவடைந்தது.
பாலிகிராஃப் சோதனையில் ஷ்ரத்தாவை கொன்றதை ஒப்புக்கொண்ட நிலையில் இந்த சோதனை முடிவடைந்தது
ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அஃப்தாப் அமீனுக்கு உண்மை கண்டறியும் சோதனை டெல்லியில் நிறைவடைந்தது.
பாலிகிராஃப் சோதனையில் ஷ்ரத்தாவை கொன்றதை ஒப்புக்கொண்ட நிலையில் இந்த சோதனை முடிவடைந்தது
காளைகள் ஒன்றரை ஆண்டு முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். 6 வயதுக்கு பிறகு காளைகளை வீடுகளில் வளர்ப்பர். உடற்தகுதி, தோற்றத்தை வைத்தே லட்சத்துக்கு மேலான பணம் கொடுத்து காளை வாங்கப்படுகிறது. ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருப்பது போன்று காளைகளை கொல்லும் வழக்கம் கிடையாது என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா விவகாரத்தில் ஆளுநர் ரவியுடன் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 உயர்ந்து ரூ. 39,640 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்து 63, 511 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள ரவீந்திர ஜடேஜாவின் மனைவி சற்றுமுன் வாக்களித்தார்.
குஜராத் தேர்தலில் அதிக வாக்காளர்கள் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடர்:
- உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
- போலத்தை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி
- சவுதி அரேபியா வீழ்த்தி மெக்ஸிகோ வெற்றி
- நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்தி துனிசியா வெற்றி
’ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன் ஜி20 தலைமையை இன்று இந்தியா ஏற்கிறது
89 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட குஜராத்தில் இன்று முதற்கட்ட தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா விவகாரம்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி
அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Background
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 190 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை:
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 194வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிசம்பர்.1) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
2025 இலக்கு:
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -