Breaking News LIVE: ஜப்பான் நகோயா நகரில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

கீர்த்தனா Last Updated: 05 May 2023 08:33 PM
ஆளுநர் குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்..!

சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்டதாக பரவும் தகவலில் உண்மை இல்லை என டிஜிபி சைலேந்திர பாபு ஆளுநரின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். 

600 இந்தியர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு..!

பாகிஸ்தான் சிறையில் உள்ள 600 இந்தியர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE : மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை

மத்திய பிரதேசத்தில் மொரேனா மாவட்டம் லேபா கிராமத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜப்பான் நகோயா நகரில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் நகோயா நகரில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Breaking News LIVE: சரத்பவார் ராஜினாமை ஏற்க இயலாது - உயர்மட்டக்குழு தீர்மானம்

தேசிய வாத காங்கிரஸ் தலைவர் பதவியில் சரத்பவார் தொடர வேண்டும் என கட்சியின் உயர்மட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது - புதிய தலைவரை தேர்வு செய்ய சரத் பவார் அமைத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Breaking News LIVE: புத்துவாயம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா!



Gold : தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 விலை உயர்வு

Gold : தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 விலை உயர்வு 

3 நாட்களில், ரூ.1280 வரை உயர்ந்தது தங்கம் விலை

3 நாட்களில், ரூ.1280  வரை உயர்ந்தது தங்கம் விலை

Breaking News LIVE: மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் இன்றும், நாளையும் ரத்து - ரயில்வே அறிவிப்பு



Breaking News LIVE: கள்ளளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் ஒருவர் பலி

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் வைகையாற்றில் மூழ்கி 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

புதுக்கோட்டை கோவிந்தநாயக்கன்பட்டியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

Breaking News LIVE: மதுரை சித்திரை திருவிழா:பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்



Breaking News LIVE:"என் கதைனு நிறைய பேரு வர்ராங்க..." புலம்பும் விஜய் ஆண்டனி!



Breaking News LIVE: பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு முழுவதும் பொறியியல், பி.டெக். படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய முகவரி மூலம் ஜூன் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யவேண்டும்‌.

Breaking News LIVE: பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம் என்னன்னு பாருங்க..!

இந்நிலையில் சென்னையில் இன்று (மே.5) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 349ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

Breaking News LIVE:மதுரை சித்திரை திருவிழா:பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!



Breaking News LIVE: மகளிருக்கு 2 மணி நேரம் வேலை தளர்வு இன்று முதல் அமல்!

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் மகளிருக்கு 2 மணி நேர வேலை தளர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. மாதத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 8.45 முதல் 10.45 மணி வரை 2 மணி நேரத்து சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


 

Breaking News LIVE: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ அழகர் வலம்!

வைகையாற்றின் நான்கு புறமும் பக்தர்களின் புடை சூழ கள்ளளழகர் வலம் வருகிறார். 

Breaking News LIVE: கும்பக்கரை அருவிகளில் குளிக்க அனுமதி

தேனி, பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு காரணமாக 7 நாள் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை மீண்டும் அனுமதி அளித்துள்ளது. 

Breaking News LIVE: மழையில் திரண்டு வந்து கள்ளழகரை வணங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

மழையில் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் வைகையாற்றில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டு கள்ளழகரை வணங்கி வருகின்றனர்.

Breaking News LIVE: வைகையாற்றில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளிய கள்ளழகர்!

பச்சைப் பட்டு உடுத்திம் பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார்.

Background

சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.5) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 349ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.