Breaking News LIVE: திருவண்ணாமலை : விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..

Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 30 Apr 2022 09:17 PM
திருவண்ணாமலை : விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..

திருவண்ணாமலை : விசாரணை கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ. 246 கோடியில் புதிய திட்டப்பணிகள்!

சட்டமன்ற மேம்பாடு திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ. 246 கோடியில் புதிய திட்டப்பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்து வருகிறார். 

ஸியோமி நிறுவனத்தின் ரூ.5, 551 கோடி சொத்துகள் முடுக்கம்!

சீன செல்போன் நிறுவனமான ஸியோமியின் ரூ.5, 551 ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கதுறை அறிவித்துள்ளது. ஸியோமி டெக்னாலஜி நிறுவத்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கதுறை தகவல் தெரிவித்துள்ளது.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. 

ஆசிய சாம்பியன்ஷிப் - வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 200ஐ நெருங்கிறது

சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஐ நெருங்கியது. மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 196 ஆக அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் நலத்திட்டப் பணிகள் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டத்தில் ரூ.114 கோடி மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தேனியில் அரசு விழா - முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

தேனி மாவட்டம் அன்னஞ்சிவிலக்கில் தமிழக அரசு சார்பில் வழங்கவிருக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.  சுமார் 11 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில்  நலத்திட்ட  உதவிகள் வழங்கப்படவுள்ளது.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை

சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை சப்பர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

நாகை அருகே கோயில் சப்பர திருவிழாவில் இறந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறந்த தீபன்ராஜ் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,688 ஆக உயர்வு

இந்தியாவில் ஒரே நாளில் 3,688 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50  பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

16 அடி உயரத்தில் கருணாநிதிக்கு சிலை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 16 அடி உயரத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் முதலமைச்சர்கள் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் முதலமைச்சர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி பங்கேற்பு

Background



சென்னையில் 24வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்ர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 





 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.