Breaking News LIVE: உதயநிதி வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 28 Apr 2022 03:08 PM
சார்ப்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் - அமைச்சர் அறிவிப்பு

அலுவலகங்களில் பணியற்றும் பொதுமக்களின் வசதிக்காக சார்ப்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்திருக்கிறார்

CM MK Stalin Speech: “முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசிய பிரதமர்” : சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல், டீசல் விலை குறித்து பிரதமர் மோடியின் புகாருக்கு விளக்கம் அளித்தார். அதில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பிரதமர் பேசி உள்ளார்” என தெரிவித்திருக்கிறார். 

ஆளுநரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு - கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு ஜாமீன்

ஆளுநரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு - கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு ஜாமீன்

இனி சென்னை ஐ.ஐ.டி நிகழ்ச்சிகளில் இனி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் - மத்திய அரசு

இனி சென்னை ஐ.ஐ.டி நிகழ்ச்சிகளில் இனி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் - மத்திய அரசு

வீழ்வேனென்று நினைத்தாயோ.! தன்னைத்தானே செதுக்கி பறந்த ஃபீனிக்ஸ்.. Happy Birthday சமந்தா..

அடுத்தடுத்த படங்கள், உடற்பயிற்சி, ஆன்மீக பயணம், பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய  ஊ சொல்றியா டான்ஸ் என பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் சமந்தாவுக்கு இன்று 35வது பிறந்ததினம்.

தொடர்ச்சியாக அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத்தங்கம் 22 காரட் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 862க்கு நேற்று விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 896க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் கிராமிற்கு ரூபாய் 25 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 837க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 200 குறைந்து ரூபாய் 38 ஆயிரத்து 696க்கு விற்கப்படுகிறது.

உதயநிதி வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி செல்லாது என்று பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Background

பிரதமர் மோடி இன்று அசாம் செல்கிறார். அங்கு அவர் ரூபாய் 500 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார். மதியம் 2 மணியளவில் அசாம் மாநிலம் திப்ருகரில் உள்ள அசாம் மருத்துவக்கல்லூரிக்கு செல்ல உள்ளார். 3 மணியளவில் கானிக்கரில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அசாமில் கட்டப்பட்டுள்ள 6 புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணித்து 7 புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.