Breaking News LIVE: புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி : பள்ளிக்கல்வித்துறை

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 27 Apr 2022 08:34 PM
சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமனம்

பல வருடங்களாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வசம் இருந்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவி இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி : பள்ளிக்கல்வித்துறை

கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில் புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து

எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி காவல்துறை தெரிவித்துள்ளது. 

டிஏபி உர மானியம் உயர்வு : மத்திய அரசு

டிஏபி உர மானியத்தை ரூ. 1,650 லிருந்து ரூ. 2,501 ஆக உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா

சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஐடியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. 

திரையுலகினருக்கு ’கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’ - அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் அறிவிப்பு

தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ என்ற பெயரில் விருது வழங்கப்படும் என அமைசர் வெள்ளக்கோயில் சாமிநாதன் அறிவித்துள்ளார்

கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிபத்து - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

105 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார். 

தஞ்சை விரைந்த முதல்வர் ஸ்டாலின்

தஞ்சை தேரோட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க தஞ்சை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்லும் முதல்வர் அங்கிருந்து காரில் தஞ்சை செல்கிறார்

நிதியுதவி அறிவிப்புகள்..

தஞ்சை தேரோட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்துள்ள மாநில அரசு. தலா 2 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தலா 1 லட்சம் வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு குடியரசு ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருஞ்சோகம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

தேங்கிய தண்ணீரால் தப்பிய உயிர்கள்..

தேர் திருவிழாவின் போது தேரை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனால் 50 க்கும் மேற்பட்டவர்கள் தேரைவிட்டு விலகி நின்றதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர். ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருப்பார்கள், இன்னும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். 

பொதுமக்களின் குற்றச்சாட்டு

சாலையை விரிவுபடுத்தும்போது மின்கம்பிகளை மீண்டும் ஓரமாக அமைக்காததே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர். 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் 4 பேர் மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

உயர் மின் அழுத்த கம்பியால் விபத்து

தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது

மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழப்பு

தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சை தேர் விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு அதிமுக நிவாரணம் அறிவிப்பு

தஞ்சாவூர் களிமேடு தேர் பவனியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது.

தஞ்சை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விபத்து நடந்த களிமேடு கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தஞ்சாவூர் புறப்பட்டிருக்கிறார்

தஞ்சை தேர் விபத்து - ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

தஞ்சை தேரோட்டத்தில் மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்தார்.

தஞ்சை தேர் விபத்து - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு குடியரசு ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 3 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,927 பேருக்கு கொரோனா உறுதியானது. 32 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சை தேர் விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு நிதி அறிவிப்பு

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்திக்க இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தஞ்சை தேர் திருவிழா விபத்து - தஞ்சாவூர் விரைகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடுபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 9 மணிக்கு விமானம் மூலம் தஞ்சாவூர் செல்கிறார். தஞ்சை, களிமேடு தேர்பவனியில் விபத்து நிகழ்ந்த நிலையில் அமைச்சர் தஞ்சை விரைகிறார்

தேர் விபத்துக்கு காரணம் என்ன..?

சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததே தேர் விபத்துக்கு காரணம் என அக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி

தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11பேர் உயிரிழந்தனர்.

Background

தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். தேரோட்டத்தின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11பேர் உயிரிழந்தனர். தேர் திருவிழா நிறைவடைந்து, அப்பர் கோயிலுக்கு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் தேர் திருவிழாவின் போது தேரை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்ததாகவும் அதனால் 50 க்கும் மேற்பட்டவர்கள் தேரைவிட்டு விலகி நின்றதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர். ஒருவேளை தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் அனைவருமே தேர் அருகிலேயே இருந்திருப்பார்கள், இன்னும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.