Breaking News Live: இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது கட்சி சிந்தாந்தங்களுக்காக ஆளுநரை கண்மூடித்தனமாக முதல்வர் வெறுக்கிறார் என்றால், இது அவர் பதவி விலகுவதற்கான நேரம். மயிலாடுதுறை சென்ற ஆளுநரின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்பட்டுள்ளது என கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து
கருப்பாக இருந்தால் திராவிடர் என்றால் எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது , எருமை திராவிடரா ? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி தாளமுத்து நகரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு வயது குழந்தை கேத்தரினாவை அடித்துக் கொலை செய்த தந்தை டேவிட்டை தாளமுத்து நகர் போலீசார் தேடி வருகின்றனர்.
மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் 2 முறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் காவல்துறையினரை ஏமாற்றி லாரி மற்றும் காரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 5050க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 40400க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், ஆபரணத்தங்கம் இன்று ரூபாய் 21 குறைந்து ரூபாய் 5029க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 168 குறைந்து ரூபாய் 40232க்கு விற்கப்படுகிறது.
24 காரட் தங்கம் கிராமுக்கு ரூபாய் 5428க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 43424க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 74.90க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 74,900க்கு விற்கப்படுகிறது.
மதுரையிலிருந்து பூப்பல்லாக்கில் எழுந்தருளி அழகர்கோயில் நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்
ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ - பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.
தமிழ்நாடு சட்டபேரவையில் கனிமவளத்துறை, தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிறிஸ்டியானா ரொனால்டோவிற்கு புதிதாக பிறந்த மகன் உயிரிழந்துள்ளதாக அவர் தன்னுடையை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Background
சென்னையில் 13வது நாளாக தொடர்ந்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -