Breaking News LIVE: 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல்.. அறிவிப்பு எப்போது ? செந்தில் பாலாஜி கூறிய தகவல்..

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 05 Jun 2023 08:57 PM
Breaking News LIVE: ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் யார்? வழக்கு பதிவு செய்த காவல்துறை..!

ஒடிசா ரயில் விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிவதற்கான விசாரணையில் முதற்கட்டமாக 7 பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Breaking News LIVE:தொடக்க கல்வி இயக்குனராக ச.கண்ணப்பன் நியமனம்

தொடக்க கல்வி இயக்குனராக முனைவர் ச.கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Breaking news LIVE:புதுச்சேரியில் வரும் 14-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

கோடை வெயில் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Breaking news LIVE:பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கா.அறிவொளி நியமனம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக முனைவர் கா.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Breaking News LIVE : ஒடிஷா ரயில் விபத்து- பிரதமர் விளக்கமளிக்க கார்கே வலியுறுத்தல்

ஒடிஷாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார். 

ஒடிஷாவில் மீண்டும் ரயில் விபத்து.. தடம்புரண்ட சரக்கு ரயில்.. 5 பெட்டிகள் சேதம்..

ஒடிஷாவில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. பார்கார் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது. யாருக்கும் காயம் இல்லை எனவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1.86 லட்சம் விண்ணப்பங்கள்..

நடப்பாண்டு பொறியியல் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க 1.86 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மீண்டும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்..

கடந்த 2ம் தேதி நடைபெற்ற விபத்தால் ரத்து செய்யப்பட்ட கோரமண்டல் எஸ்க்ஸ்பிரஸ் ரயில் சேவை, இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிப்பு

பயணிகள் ரயில் சேவை..

சரக்கு ரயில் போக்குவரத்தை தொடர்ந்து இன்று காலை 7.40 மணியளவில் பஹாநகா மார்க்கமாக, பயணிகள் ரயில் சேவையும் தொடங்கியது.

தொடங்கிய ரயில்சேவை...

ஒடிசாவின் பாலசோர் அடுத்த பஹாநகா பகுதியில் நிகழ்ந்த விபத்தை தொடர்ந்து, 51 மணி நேர முயற்சிகளுக்குப் பிறகு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து நேற்று இரவு 11 மணியளவில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது 

Background

கோர விபத்து நிகழ்ந்த ஒடிசாவின் பாலசோர் பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதனை பார்வையிட்டார்.


3 ரயில்கள் மோதி விபத்து:


ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் கடந்த 2ம் தேதி மாலையில், 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலரது உடல் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேநேரம், உடல் நசுங்கி பலியான பலரது உடல்கள் இதுவரை அடையாளம் காணமுடியாத சூழலில் தான் உள்ளன. இதனிடையே, நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதேநேரம், விபத்து நிகழ்ந்த இடத்தில் துரித கதியில் மறுசீரமைப்பு பணிகள் இரவு பகலாக நடைபெற்று வந்தது. தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டன. விபத்து நிகழ்ந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்ட நிலையில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திலேயே கடந்த 3 தினங்களாக இருந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டார். அதோடு, புதன்கிழமைக்குள் அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.


அசுர வேகத்தில் நடந்த பணிகள்:


விபத்து நடந்த பஹாநகா இடத்தில் உள்ள இருப்புப் பாதையில் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சுக்கு நூறாக சிதறி கிடந்த விரைவு ரயிலின் பெட்டிகள் உடன் சரக்கு ரயில் பெட்டிகள் என அனைத்து அகற்றப்பட்டன. தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.






மீண்டும் தொடங்கிய ரயில் சேவை:


இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாநகா பகுதியில் 51 மணி நேரத்திற்குப் பிறகு, மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. முதலாவதாக சரக்கு ரயில் அந்த மார்கத்தில் பயணம் செய்தது. இதனை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.இதனை கண்டு உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் ரயிலை நோக்கி கைகளை கூப்பி கும்பிட்டார்.


”இதுதான் எங்கள் இலக்கு”


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ”காணாமல் போனவர்களை விரைந்து அடையாளம் கண்டு, அவர்களது குடும்பத்தினருடன் சேர்ப்பது தான் எங்களது கடமை. எங்களது கடமை என்பது எனும் முடிவடையவில்லை” என கூறினார். அப்போது ரயில்வேதுறையை சார்ந்த மூத்த அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். இந்தியாவின் கிழக்குப்பகுதியை தென் மாநிலங்களுடன் இணைப்பதில் இந்த வழித்தடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு நேர்ந்த கோர விபத்தால், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமைக்குள் சீரமைக்க திட்டமிடப்பட்டு இருந்த ரயில் போக்குவரத்து, ஞாயிற்றுக்கிழமை இரவே சீரமைக்கப்பட்டு சேவையும் தொடங்கியுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.