Breaking News LIVE: சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..

Breaking NEWS LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 02 Jun 2023 09:20 PM
கோரமண்டல் விபத்து : தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஒடிசா விரைகிறார்

கோரமண்டல் விபத்து : தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஒடிசா விரைகிறார்

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து...

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து...பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்..!

Breaking News LIVE: அரக்கோணம் ரயில்கள் ரத்து..!

சென்னை செண்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் கடம்பத்தூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அதிவிரைவு ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 

Breaking News LIVE: யுவராஜூக்கு விதித்த வாழ்நாள் சிறை தண்டனை உறுதி

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜூக்கு விதித்த வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

வழக்கத்தை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வழக்கத்தை விட அதிகமாக வெயில் 2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

2011ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

2011ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இளையராஜாவிற்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இளையராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்றும் - ஆலை நிர்வாகம் கோரிக்கைகள் நிராகரிப்பு

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றும் பணிகளை அரசே மேற்கொள்ளும் என்றும், அதற்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகமே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் பேனர் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு - 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு

கோவையில் பேனர் சரிந்து தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

பட்டாசு ஆலைகளை அரசு கண்காணிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். 

Background


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 377 நாட்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.