Breaking News LIVE: வருமான வரித்துறை சோதனையை எதிர்கொள்ள தயார் - செந்தில் பாலாஜி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் , மறைமலைநகர் அருகே Youtuber இர்பானுக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
இர்பானின் கார் ஓட்டுநர் அசாரூதின் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். வைகாசி விசாக திருவிழாவையொட்டி இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஜுன் 10ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்மையாக இருக்கிறோம். எந்த சோதனையையும் விசாரணையையும் எதிர்கொள்ள நானும் என்னை சார்ந்தவர்களும் தயார் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை சோதனையை எதிர்கொள்ள தயார்; முழு ஒத்துழைப்பு அளிக்கவும் தயார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஐ.டி. உள்ளிட்ட எந்த ரெய்டுகளுக்கும் அஞ்சாத இயக்கம் திமுக என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
நாகையில் ஹிஜாப் அணிந்திருந்த மருத்துவருக்கு பாஜக நிர்வாகி மிரட்டல் விடுத்த விவகாரத்திற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் சோதனை நடக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வருமான வரி சோதனை கண்துடைப்பு நடவடிக்கை, எவ்வளவு பறிமுதல் என சொல்லப்படுவதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் வழிக் கல்வியை வளர்க்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற திறப்பான மே 28ஆம் தேதி ரூ.75 நாணயத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிடுகிறது.
புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840க்கு விற்பனையாகிறது.
ஹதராபாத், பெங்களூரு, பாலக்காட்டில் அமைச்ச செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் 6வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மணப்பாறை அருகே எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் 50 சவரனை கொள்ளையடித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், கரூரில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இந்நிலையில், வருமான வரி சோதனைக்கு வருகை தந்த அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் அமைந்துள்ள செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்து வரும் நிலையில், அதிமுகவிலிருந்து திமுகவில் அண்மையில் இணைந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதரபாத், பெங்களூருவிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி.சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, கோவை, கரூர் தொடங்கி ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 5 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், கரூர் மாநகராட்சிக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் வருகின்ற 29ஆம் தேதி அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலைய்ல், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
2 நாள் பயணமாக ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் புதுச்சேரி வரவிருந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதாரர் அசோக் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஒசாகாவுக்கு அரசு முறை பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ள நிலையில், அவர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவிப்பு வெளியிடுகிறார்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Background
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இன்று (மே.26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 370 நாட்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர் 5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -