Breaking News LIVE: ’தமிழ்நாடு கல்வி கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது.’- ஆளுநரின் சர்ச்சை கருத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜர் பகுதியில் லேசான நிலநடுக்கம். ரிக்டரில் 2.5 ஆக பதிவு!
இந்திய – அமெரிக்க ராணுவ பாதுகாப்பை விரிவாக்க திட்டம்; டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
தமிழ்நாட்டில் இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் 5 புறநகர் ரயில்கள் வரும் 7,8 மற்றும் 9ஆம் தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகளின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது! இந்தாண்டு 2,29,165 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர்.
Background
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலசோர் அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) நிலையத்தில் விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:
இந்திய தண்டனைச் சட்டம், 337, 338, 304A (ஜாமீனில் வெளிவர முடியாதது) மற்றும் 34 (அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள்) ஆகிய பிரிவுகளின் கீழும் ரயில்வே சட்டம் 153, 154 மற்றும் 175 (பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய பிரிவுகள் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாலசோர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோர விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைவதற்கு காரணமான இந்த விபத்து, இந்திய ரயில்வே வரலாற்றில் மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது.
"இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம்"
ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார். அது முடிவடைந்து விசாரணை அறிக்கை வந்து சேரட்டும். முன்னதாக விபத்திற்கான காரணம் என்ன காரணமானவர்கள் யார் என்ன என்பது குறித்து கண்டறிந்துள்ளோம்.
ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம். தற்போதைக்கு இந்த பாதையில் போக்குவரத்தை சீர் செய்வது தான் எங்களது முக்கிய நோக்கமாக உள்ளது" என்றார். ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு ரயில்களின் திசையை மாற்றுவதற்காக மின்னணு இண்டர்லாக்கிங் முறை பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல, விபத்தில் சிக்கிய ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படவிலலை என ரயில்வே போர்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து ஹவுராவிற்கும், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஹவுராவிலிருந்தும் வந்து கொண்டிருந்தது.
இரண்டு பிரதான லைனிலும் சிக்னல் பச்சை நிறத்தில் இருந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 128 கிமீ வேகத்திலும், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 126 கிமீ வேகத்திலும் சென்று கொண்டிருந்தது. இதன் வரம்பு மணிக்கு 130 கிமீ ஆகும். எனவே, இரண்டு ரயில்களும் அதிவேகமாக இயக்கப்படவில்லை" என்றார்.
ருத்ராஜ் கெய்க்வாட்
மகாராஸ்ட்ரா கிரிக்கெட் சம்மேளம் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. இது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎல் தொடரினைப் போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கும் இந்த போட்டி மகாராஸ்ட்ரா அளவில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, புனேயின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் ஜூன் 15ஆம் தேதி தொடங்குகிறது.
MCA தலைவர் ரோஹித் பவார் செய்தியாளர்களிடம், அணிகளுக்கான உரிமையாளர் ஏலத்தில், கிரிகெட் சங்கத்துக்கு 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து விருப்ப மனுக்கள் வந்துள்ளது. ஆறு அணிகளின் விற்பனை மூலம் 18 கோடி ரூபாயை நிர்வாகம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் அதைவிட மூன்று மடங்கு அதிகமாக கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் "ஆறு எம்பிஎல் அணிகள் ஒவ்வொன்றிற்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ 1 கோடி அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளோம், குறைந்தபட்ச மதிப்பு ரூ 18 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று ரோஹித் பவார் கூறினார். இன்று அணிகள் ஏலம் விடப்பட்ட பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஆறு அணிகளுக்கு ரூ.57.80 கோடி என்ற சாதனை உரிமையைப் பெற்றுள்ளோம். திறந்த ஏல முறை மூலம் அணியை வாங்குவதற்கு முற்றிலும் வெளிப்படையான செயல்முறையை நாங்கள் பின்பற்றினோம். எனவும் அவர் கூறினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -