Breaking News LIVE: மணிப்பூர் பிரச்னை.. ”பிரதமர் மோடி பேசணும்”.. எம்.பிக்கள் விடிய விடிய போராட்டம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 25 Jul 2023 06:31 PM
Breaking News LIVE: ஆளுநர் ரவிக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளி மாணவர்கள்

கன்னியாகுமரியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் வின்னி, பிளெஸ்ஸி, மெல்ஷா ஆகியோர் ஆளுநர் ரவி மற்றும் லக்ஷ்மி ரவியிடம் மரக்கன்றுகளை வழங்கினர். 

பியூஷ் கோயல் வலியுறுத்தல்..

”மணிப்பூர் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுவார். அதேபோன்று, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும்” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவயில் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் பற்றி பேசுங்கள் - கார்கே

”மணிப்பூரில் கலவரம் நடக்கிறது, மாநிலமே பற்றி எரிகிறது அதைபற்றி பிரதமர் மோடி பேச வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். ஆனால், அவர் தற்போது கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். 

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.  அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

எதிர்க்கட்சி எம்.பிக்கள் விடிய விடிய போராட்டம்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என, எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Background

சென்னயில் பெட்ரோல், டீசல் தொடர்ந்து 430வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.


பெட்ரோல் டீசல் விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 430வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.  இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.