Breaking News LIVE: பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு - 670 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தட்டுகளைக் கழுவியும், தேநீர் பறிமாறியும் வளர்ந்தவன் நான் : மோடி பேச்சு
வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பால் ஏற்காடு மலைப்பாதையில் 2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தோல்வி பயத்தில் பாஜக நடுங்குவது அவர்களின் குரலிலேயே தெரிகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். எந்த மாநிலத்தில் பேசினாலும் பிரதமர் மோடி திமுக மீது பழி சுமத்துகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் ரவுடி தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான உண்மையான காரணம் பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெபல் புயல் தீவிரமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவில் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
Background
- மக்களவை தேர்தலில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இந்த தேர்தலில் 61.02 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.அதிகபட்சமாக மேற்குவங்கத்தில், 79.5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 58 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது. ஏப்ரல் 19 ஆம் தேதியில் இருந்து நடந்து வரும் மக்களவை தேர்தலில் மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜுன் 1ம் தேதி கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றது. இரு அணிகளும் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கோப்பைகளை வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
- டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் தீ விபத்தை தொடர்ந்து 12 குழந்தைகள் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். அதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்தத்தில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ்ராஜ் தான் எந்த கட்சியும் சாராதவன் என்றும் நான் ஒரு கலைஞன் தான். திறமையால் ஆகவில்லை. இன்றைக்கு ஒரு மேடையில் நான் நிற்க காரணம் மக்களுடைய அன்பும், நம்பிக்கையும் தான் என தெரிவித்தார்,
- - - - - - - - - Advertisement - - - - - - - - -