Breaking News LIVE: 6ஆம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவு.. மேற்குவங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
6 மணி நிலவரப்படி, 6ஆம் கட்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 58.93 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வழக்கம் போல், மேற்குவங்கத்தில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளது.
"அம்மியில் அரைத்தால்தான் சூப்பரான சமையல் கிடைக்கும் என்று சொல்பவர்களை அரைக்கவிட்டால்தான் புரியும்.. கண்மூடித்தனமான பழமை மோகம்.."
சென்னை தரமணியில் நடந்த அறிவியல் நிகழ்ச்சியில் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பேச்சு.
Breaking News LIVE: சென்னையில், மாலை சுமார் 6 மணியிலிருந்து பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்தியாவில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் நடைபெற்ற ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்தியாவில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதில், 3 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 53.73%, உத்தரபிரதேசத்தில் 52.02%, மேற்குவங்கத்தில் 77.99%, ஜம்மு &காஷ்மீரில் 51.35 %, ஒடிசாவில் 59.60% வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள இரும்புலி மலை கிராமத்தின் அருகே காலை 11 திடீரென்று 2 ஹெலிகாப்டர் அப்பகுதியில் வட்டமிட்டு மலையின் அடிவாரத்தில் கீழே இறங்கியது. பிறகு ஹெலிகாப்டரில் இருந்த நபர்கள் மாறி மற்றொரு ஹெலிகாப்டரில் ஏரி சென்றுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கே தெரியவில்லை
இந்தியாவில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதில், 3 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 49.20 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 44..58%, உத்தரபிரதேசத்தில் 43.95%, மேற்குவங்கத்தில் 70.19%, ஜம்மு &காஷ்மீரில் 44.41 %, ஒடிசாவில் 48.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Saroj Goenka :
இதழியல் துறையில் பெரும் சாதனை படைத்த எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்கா அவர்களின் மருமகளான திருமதி. சரோஜ் கோயங்கா (94) அம்மையார் நேற்று (24-05-2024) மறைவெய்தினார் என்று அறிந்து வேதனையடைந்தேன்.
ராம்நாத் கோயங்கா அவர்களின் ஒரே மகனான மறைந்த பகவன் தாஸ் கோயங்கா அவர்களின் மனைவியான திருமதி. சரோஜ் கோயங்கா அவர்கள் எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் (மதுரை) லிமிட்டெட் நிர்வாக இயக்குநராகச் சிறப்பாகப் பணியாற்றிவர் ஆவார். மேலும் எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிட்டெட் இயக்குநராக இருந்து ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவையும் அவர் உருவாக்கினார் என்பதும், அதனை 2010-ஆம் அப்போதைய முதலமைச்சரான தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதழியல், தொழில்துறையில் சாதனை படைத்தவர் என்பது மட்டுமின்றி, சிறந்த மனிதநேயராக இருந்து கொடைத்தன்மை மிக்கவராகவும் விளங்கியவர் சரோஜ் கோயங்கா அவர்கள்.
அன்னாரை இழந்து வாடும் அவரது மகள்களுக்கும், கோயங்கா குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
"கலவரத்தைத் தூண்டிவிடவும், விளம்பரங்கள் மூலம் பொய்களை பரப்பவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்?, கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா?" - மம்தா பானர்ஜி கேள்வி
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வாக்களித்தார்.
7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில், 11 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 25.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 21.69%, உத்தரபிரதேசத்தில் 27.06%, மேற்குவங்கத்தில் 36.88%, ஜம்மு &காஷ்மீரில் 23.11%, ஒடிசாவில் 21.30% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாங்குநேரியில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக போலீசார் -நடத்துநர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபட்டதாக அபராதம் விதித்தனர். இதனால் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் உள்துறை செயலாளர் அமுதா - போக்குவரத்து துறை பணீந்தர் ரெட்டி இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களித்தார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது குழந்தைகள் ரைஹான் ராஜீவ் வத்ரா மற்றும் மிராயா வத்ரா ஆகியோருடன் டெல்லியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வெளியே காத்திருந்தனர். பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் சென்ற நிலையில், ராகுல் காந்தி தனது குடும்பத்தினருடன் வெளியே காத்திருந்தார்.
மக்களவை தேர்தலில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வரும் நிலையில் காலை 9 மணி வரை 10.82% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.
சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். ரூ. 4 லட்சம் கடனுக்கு ரூ.8 லட்சம் ஏற்கனவே வசூலித்ததாகவும், மீண்டும் ரூ.9.5 லட்சம் கேட்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணி வரை தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில், 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போது வரை 429 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்று 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
சுமார் 11.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1.14 லட்சம் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகின்றனர். 11.13 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், ஹரியானவைச் சேர்ந்த 10 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த 1 தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 4 தொகுதிகள், டெல்லியைச் சேர்ந்த 7 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள், மற்றும் மேற்குவங்கத்தச் சேர்ந்த 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி உள்ளது. இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த, அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் நான்காம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மொத்தமாக வரும் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில், நேற்று முதல் வார இறுதி நாட்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு எளிதாக செல்லும் வகையில் கூடுதலாக 1460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in என்ற இணையதளத்திற்குச் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -