Breaking News LIVE: ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோடை வெயில் கொளுத்தி வந்த சூழலில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை மாலை முதல் பெய்து வருகிறது.
புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் உள்ள நீர்த்தொட்டி குடிநீரில், மாட்டுச்சானம் கலக்கப்பட்ட விவகார வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இன்றுமுதல் கேரளாவில் 5 நாட்களுக்கும், கர்நாடகாவில் நாளை முதல் 4 நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மே 18, 19 தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலைதூக்கினால் நமது கொள்கைகளை கொண்ட ஒருவரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மோடி கூறுகிறார், ஆனால் 200 தொகுதிகளில் கூட பாஜக வெல்லாது என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
மும்பையில் ஏஎன்ஐ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, “இது பிரதமர் மோடியின் தேர்தல் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாக நினைக்கிறேன். ஓட்டு அவருக்கானது. மும்பை போன்ற நிதி தலைநகரம் 2014 மற்றும் 2019ல் பிரதமர் மோடியுடன் நின்றதற்காக பெருமை கொள்ளும். 2024 வேறுவிதமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, மகாராஷ்டிரா பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நன்றாகச் செயல்படும் என்பதை நாம் மீண்டும் பார்க்கப் போகிறோம்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை 44% குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல், இந்த காலக்கட்டத்தில் வழக்கமாக 92.2 மிமீ மழை பதிவாகும் ஆனால் தற்போது 52 மிமீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள கே.ஆர்.பாளையம் கிராமத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக உள்ள திறந்தவெளி கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மேற்கொண்டதில் கிணற்றில் இருந்தது தேன் அடை என கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக கிணற்றை சுற்றி வேலி அமைக்கவும் மாவட்ட ஆட்சியர் முடிவு செய்துள்ளார்.
மே17,18.19 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,725க்கும் சவரன் ரூ.53,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை30 காசுகள் அதிகரித்து ரூ. 91க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் பாபட்லா மாவட்டம் சின்னகஞ்சத்தில் இருந்து, ஐதராபாத் நோக்கிச் சென்ற பேருந்து, சில்கலூரிப்பேட்டை வரிபாலம் டோங்கா என்ற இடத்தில் டிப்பர் லாரி மீது மோதியதில் பேருந்து மற்றும் லாரி தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக குண்டூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐநாவை சேர்ந்த இந்திய அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த முகளிவாக்கம் கணேஷ் அவென்யூ, சுபஸ்ரீ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான விசாரணையில், சூதாட்டம் விளையாட ஆன்லைன் செயலி மூலம் ரூ.2 லட்சம் வரை கடன் பெற்று பின்னர் அந்த தொகையை செலுத்தியுள்ளார். இந்நிலையில், அந்த ஆன்லைன் செயலியில் இருந்து வந்த லீங்கை தொட்டவுடன் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பாமல் பணம் கொடுத்து விட்டதாக குறுஞ்செய்தி சீனிவாசனுக்கு வந்துள்ளது.
மேலும் பணத்தை கேட்டு இவரது புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து அவருக்கு தெரிந்தவர்களின் செல்போன் நம்பர்களுக்கு அனுப்பியது தெரிய வந்தது. இதனால் மனம் உடைந்த சீனிவாசன் வாங்காத கடனை அடைப்பதற்காக தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து அந்த செயலியில் பணத்தை செலுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் ஸ்ரீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவருக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உட்பட, மகாராஷ்டிரா மாநிலத்தில் 13 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு பிரதமர் மோடி இன்று மாலை மும்பையில் வாகன பேரணி நடத்த உள்ளார். காட்கோபர் எல்.பி.எஸ். மார்க் பகுதியில் இருந்து காந்தி நகர் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளார்.
வெயிலின் தாக்கம் குறைந்ததால் கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல பணிகளை மேற்கொள்ள தொழிலாளர் பாதுகாப்பு இயக்ககம் அனுமதியளித்துள்ளது. வெயில் காரணமாக திறந்தவெளி கட்டட பணிகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக ஆலந்தூர் வரை சென்று வழித்தடம் மாறிக்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Background
- மதம் சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதுதொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில், மதம் சார்ந்து தான் எந்த பரப்புரையையும் மேற்கொள்ளவில்லை எனவும், இந்து-முஸ்லிம் என்று பிரிவினை செய்தால், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியானவனாக இருக்க மாட்டேன் என கூறியுள்ளார். கடந்த மாதம் மதம் சார்ந்த பரப்புரைகளை மேற்கொண்டதாக பிரதமர் மோடிக்கு விளக்கம் கேட்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பண்ருட்டியைச் சேர்ந்த அப்துல் ஹமீதை வழியனுப்ப சென்ற குடும்பத்தினர் சென்ற கார் திரும்பும் வழியில் மதுராந்தகம் அருகே விபத்து நடந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் பாண்டிச்சேரி சென்று திரும்பிய கார் கல்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
- ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் , பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. நேற்று நடந்த போட்டியில் லக்னோவை வீழ்த்தி டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஜெயித்தாலும் தொடரில் இருந்து டெல்லி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -