Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
40 தொகுதிகளிலும் வென்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் என்று திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். அதற்கு முதல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.
நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார் , அண்ணன் ஸ்டாலின் அவர்கள்.
கேரளாவில் ஒரு நடிகரை வைத்து ஒரு இடத்தை பெற்றுள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடு தான்.
எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை
தேசிய தலைவர்கள் அனைவரையும் அழைத்து அண்ணன் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.
அண்ணன் ஸ்டாலின் தொடர் வெற்றியை பெற்று வருகிறார். இதற்கு அனைத்து காரணம் அண்ணன் ஸ்டாலின் ஆளுமை தான்.
ஒவ்வொரு தேர்தல் கூட்டணி மாறும் அப்படி பட்ட கூட்டணி தான் அதிமுக பாஜக கூட்டணி..
நான்கு தேர்தல்களை சந்தித்தும் கூட்டணியில் சிதைவு இல்லை.. - திருமாவளவன்
பொதுவிநியோகத்திட்டத்தில் எந்த அடிப்படையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. தமிழக மக்கள் மசூர் பருப்பை விட துவரம் பருப்பையே அதிகம் விரும்புகின்றனர். தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மசூர் பருப்பு கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு வாதம்
கோவையில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த கூட்டத்தை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
கன்னட நடிகர் தர்ஷனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தன்னை அரசியலுக்கு அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன்.
தனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாததால் நிச்சயம் அரசியல் இறங்க மாட்டேன் என KPY பாலா திட்டவட்டம்
பிறருக்கு தான் செய்யும் உதவிகள் தனது திருமணத்திற்கு பின்பும் தொடரும் என KPY பாலா பேட்டி.
கோவையில் தி.மு.க. முப்பெரும் விழா கொடிசியா மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.
கோவையில் இன்னும் சற்று நேரத்தில் தி.மு.க.வின் முப்பெரும் விழா தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமாகிய மு.க.ஸ்டாலின் சற்று முன் வந்தார். அவருடன் தி.மு.க. தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
Vikravandi ByElection : ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
சேலம் வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 9 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக கொண்டு அ.தி.மு.க. செயல்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் அண்ணா, குண்டா கொடுத்து வாக்குகளை பெறும் தி.மு.க. என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கலால் வரி உயர்வால் கர்நாடகாவில் பெட்ரோல் விலை ரூபாய் 3ம், டீசல் ரூபாய் 3.50 உயர்ந்துள்ளது.
சென்னையில் ரவுடி கனகராஜை கொல்ல பதுங்கியிருந்த 12 பேர் கத்தி, அரிவாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை கே.கே.நகரில் பிசா கடைக்குள் புகுந்து 5 பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்டது. இந்த சம்பவத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சென்னை அரும்பாக்கத்தில் கூலிப்படை கும்பல் தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது. அவர்களிடம் இருந்து 5 கத்திகளை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை!
‘விஷ்ணு வந்தார்’ புத்தகத்தை எழுதிய லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான முதல் சிறுகதை தொகுப்பிற்கே சாகித்ய விருது பெற்றுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமன். ‘தன்வியின் பிறந்தநாள்’ புத்தகத்தை எழுதிய யூமா வாசுகிக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: பூண்டி வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள அன்னதான கூடத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, வெளியே வர முடியாமல் தவிக்கும் காட்சி. ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின், ஒரு வழியாக யானை தானாகவே வெளியே வந்தது.
நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட அருண்ராஜா காமராஜ் பிறந்தநாள் இன்று!
கோவை: கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றன.
ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி. அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் தனித்து போட்டியிட்டவர். இம்முறை பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிங்கிலிக்காம்பட்டியில் பேருந்து நிற்காமல் சென்ற நிலையில் அதில் ஏறுவதற்காக ஓட முயன்ற கர்ப்பிணி பெண் கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டம்! மீனம்பாக்கம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு மெட்ரோ வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகள் Mudra Ventures நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் புது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல்.
திருநெல்வேலியில் கலப்பு திருமணம் செய்து வைத்ததால் பெண் வீட்டார் ஆத்திரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை நேற்று சூறையாடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்க்குப்பதிவு செய்த போலீசார் வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் பண மோசடி செய்ததாக புகார் - தயாரிப்பாளர்கள் ஷோன் ஆண்டனி, சவுபின் ஷாகிர், பாபு ஷாகிர் ஆகியோரிடம் அமலாக்கத்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ரூ.220 கோடி வரை கணக்கில் வராமல் இருப்பதாகவும், அந்த பணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி : மீன்பிடி தடைகாலம் முடிந்தது.. 61 நாட்களுக்குப் பிறகு ஆர்வத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கர் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட்டை, பிரேத பரிசோதனை அறிக்கையை அவரது மனைவியிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்!
டி20 உலகக்கோப்பை : 31வது லீக் ஆட்டத்தில், நேபால் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பைபாஸ் சாலையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட விஜயகுமார், மணிகண்டன் மற்றும் வைரமணி ஆகியோரை போளூர் போலீசார் கைது செய்தனர்; கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் மற்றும் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் வனத்துறையினர் அனுமதி - கடந்த 7 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Background
- கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகியவை நடைபெற இருக்கிறது.
- 'பசுமை சகாப்தத்தை' உருவாக்க கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என, ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். “செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மூலோபாயத்தை உருவாக்கும் முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2047-க்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவது எங்களின் தீர்மானம். சமூகத்தின் எந்தப் பிரிவினரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதே எங்கள் அர்ப்பணிப்பு" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் நேற்று மாலை 3மணி முதல் சிறுத்தை உலா வந்து கொண்டிருக்கிறது அதனை பிடிக்க திருப்பத்தூர் வனத்துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். வனத்துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை!12 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கார் சேட்டில் பதுங்கி இருந்த சிறுத்தையை பத்திரமாக வனத்துறையினர் மீட்டனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -