Breaking News LIVE: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 27ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 647வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

Continues below advertisement
14:36 PM (IST)  •  27 Feb 2024

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

14:06 PM (IST)  •  27 Feb 2024

Breaking News LIVE: புதிய அணை கட்ட ஆந்திரா முயற்சி - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்..

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மாநிலம் புதிய அணை கட்டும் முயற்சிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய அணை கட்ட முயற்சிப்பதும் அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். 

13:12 PM (IST)  •  27 Feb 2024

Breaking News LIVE: விஜயதரணிக்கு பதவி ஆசை - காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் விமர்சனம்

பதவி ஆசையில் பாஜகவில் விஜயதரணி சேர்ந்துள்ளார். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். பாம்பனில் நடைபெற்ற மீனவர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கூறியுள்ளார். 

11:27 AM (IST)  •  27 Feb 2024

சிதம்பரத்தில் தான் போட்டி - திருமாவளவன்

எனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன். அந்தில் சந்தேகமே வேண்டாம். அதிமுக பாஜகவை விட்டாலும், பாஜக அதிமுகவை விடுவதாக தெரியவில்லை - திருமாவளவன்

11:04 AM (IST)  •  27 Feb 2024

Breaking News LIVE: அதிமுகவில் இருந்து விலகினாரா ஜான் பாண்டியன்?

அதிமுக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து த.மா.க விலகிய நிலையில், 2வது கட்சியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகியதாக தகவல் கசிந்துள்ளது. அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், பா.ஜ.கவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

10:18 AM (IST)  •  27 Feb 2024

திமுக - காங்கிரஸ் இடையே இழுபறி இல்லை - ஆனந்த ஸ்ரீனிவாசன்..

தி.மு.க காங்கிரஸ் இடையே எந்த இழுபறியும் இல்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பு பிரிவு தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். நிச்சயம் 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

09:29 AM (IST)  •  27 Feb 2024

Breaking News LIVE: அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு இனி பணி வழங்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பணிக்காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கு இனி பணி வழங்கப்படும். வாரிசுகள் இறந்து 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்தால்  தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய துறைகளில் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

07:50 AM (IST)  •  27 Feb 2024

Breaking News LIVE: பரந்தூர் விமான நிலைய விவகாரம் போராட்டம் - 137 நபர்கள் மீது வழக்குப்பதிவு

பரந்தூர் விமான நிலைய விவகாரம் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்ட நிலையில், 137 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

07:47 AM (IST)  •  27 Feb 2024

Breaking News LIVE: கேரளாவில் காட்டு யானை தாக்கி மீண்டும் ஒருவர் உயிரிழப்பு

கேஎரளா மாநிலம் மூணாறில் யானை தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். கன்னிமலை என்ற இடத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது காட்டு யானை வழி மறித்து தாக்கியது. 

07:46 AM (IST)  •  27 Feb 2024

Breaking News LIVE: ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்கனவே முடிவுற்ற ரூ.8,801 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதேபோல் ரூ.1, 615 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

07:25 AM (IST)  •  27 Feb 2024

Breaking News LIVE: தமிழக மீனவர்களுக்காக இரண்டு நாட்கள் காங்கிரஸ் போராட்டம்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் விரோதப்போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்றும், நாளையும் போராட்டம் நடைபெறுகிறது. பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.