PM Modi TN Visit LIVE: தமிழ் மக்களை மிகவும் நேசிக்கிறேன் - பிரதமர் மோடி
PM Modi TN Visit LIVE Updates: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி பங்கேற்கும், நிகழ்ச்சிகள் தொடர்பான அப்டேட்களை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
எனக்கு தமிழ் மொழி தெரியாது ஆனால் தமிழ் மக்களை மிகவும் நேசிக்கிறேன் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் இனி தி.மு.க. தேடினாலும் கிடைக்காது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் அகற்றப்பட வேண்டிய கட்சிகள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நெல்லை அல்வாவைப் போலவே இனிமையானவர்கள் என்று பேசினார்.
தமிழ்நாடு வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிகின்றனர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த செய்திகளை வெளியிட விடாமல் தமிழக அரசு தடுக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
காசிக்கும், தமிழ்நாட்டிற்குமான உறவு வலுப்பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் வளர்ச்சியின் புதிய அத்தியாத்தை உருவாக்கியுள்ளது.
இந்திய வரைபடத்தின் வளர்ச்சியில் முன்னேற்றத்தின் எடுத்க்காட்டு இன்றைய நிகழ்வு
இந்தியாவின் வளர்ச்சிக்கு இத்திட்டங்கள் உந்துதலாக இருக்கும்.
இன்று தேசம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
வ.உ.சி வெளி துறைமுக சரக்கு முனையம் வெகு நாட்களாக காத்திருக்கிறது.
இந்த ஒரு திட்டம் மட்டும் 7 ஆயிரம் கோடி மதிப்பில் துவக்கப்பட்டுள்ளது.
2,500 கோடி மதிப்பில் 13 புதிய திட்டங்கள் இன்று துவங்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்
தூத்துக்குடியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். முன்னதாக குலசேகரப்பட்டிணம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர் வணக்கம் எனக்கூறி தனது உரையை தொடங்கினார் மோடி. அப்போது மேடையில் அமர்ந்திருந்த அனைவர் பெயரையும் குறிப்பிட்ட மோடி, தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி பெயரையும், அமைச்சர் எ.வ.வேலு பெயரையும் கூறாமல் தவிர்த்து விட்டார். இது எதேர்ச்சையாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா என தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வணக்கம் என கூறி தூத்துக்குடியில் பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.
நெல்லை வரும் பிரதமர் மோடியை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தியபடி பொதுக்கூட்டம் மேடைக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். தொடர்ந்து கருப்பு பலூன்களையும் பறக்க விட்டனர். இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
2047ல் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்காக பிரதமர் மோடி உழைக்கிறார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ள நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் முருகன், அமைச்சர் எ.வ.வேலு, கனிமொழி எம்.பி. பங்கேற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் ரூபாய் 17 ஆயிரத்து 300 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் மதுரையில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.
பிரதமர் மோடி மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டுச் சென்றார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி.
பல்லடத்தில பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி மதுரைக்றகு ஹெலிகாப்டர் மூலமாக சென்றுள்ளார்.
எம்.ஜி.ஆரை அவமதிக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தொழில் துறையில் கொங்கு மண் முக்கிய பங்காற்றி வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
தமிழ்நாடு தேசியத்தின் பக்கம் நிற்கிறது என்று பிரதமர் மோடி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
பல்லடம் பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி வெல்லும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசினார்.
பல்லடத்தில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி மேடையை நோக்கி பிரதமர் மோடி மக்களை பார்த்து கை அசைத்தபடி சென்று கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடி கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலமாக வந்தடைந்தார்.
பிரதமர் மோடி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள உள்ளதால், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுவட்டாரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இஸ்ரோ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்னும் சற்று நேரத்தில் கோவை சூலூர் வருகை தர உள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் அடைந்து, பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இன்று திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடித்த பின்பு, கூட்டணியை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களை பிரதமர் மோடி சந்திப்பார் என கூறப்படுகிறது. அதில் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, மதுரைக்கு சென்று அங்கு தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதைதொடர்ந்து, இன்று இரவு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்குகிறார். அப்போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து கோவை, திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, பிரதமர் மோடி பயணிக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். முதல் நிகழ்ச்சியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
Background
PM Modi TN Visit: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி:
பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். இதில் பல்வேறு அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்வது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் இன்றைய பயண விவரம்:
- இன்று பிற்பகல் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்
- பிற்பகல் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர் மோடி
- 2.45 முதல், 3.45 வரை அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார் பிரதமர் மோடி
- 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து சூலூர் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்.
- 5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்
- 6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார் பிரதமர்
- அன்றைய தினம் அரசியல் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமரின் நாளைய பயண திட்டம்:
- நாளை காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்
- 8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார் பிரதமர் மோடி
- 9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கிறார். இதில் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளமும் அடங்கும்.
- 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார்
- ராமேஸ்வரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தையும் திறந்து வைக்கிறார்.
- 11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்று தனது தமிழக பயணத்தை முடிக்கிறார்
- 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பிரதமரின் வருகையை தொடர்ந்து மதுரை விமான நிலையம், அவர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்கள் உள்ளிட்டவை மத்திய பாதுகாப்பு படைப்பிரிவினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தீவிர பரிசோதனைக்கு பிறகே பொதுமக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தங்க உள்ள தனியார் ஓட்டலில் 100-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் பயணிக்க உள்ள சாலைகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பசுமலை தனியார் நட்சத்திர ஓட்டல், கருப்பாயூரணி டி.வி.எஸ். பள்ளி மற்றும் பிரதமர் பயணிக்கும் சாலை, மாநகர, மாவட்ட எல்லைகளில் டிரோன்கள் பறக்க இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ள திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும் சுமார் 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் கொண்டு அந்த பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -