Breaking LIVE : வேங்கைவயல் வழக்கில் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனைக்கு அனுமதி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
வேங்கைவயல் வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை எடுக்க சி.பி.சி.ஐ.டிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பலா, வாளி மற்றும் திராட்சையில் ஒன்றை சின்னமாக கேட்டுள்ளேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நெல்லை மற்றும் விளவங்கோடு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேடட்பாளர் டி.ஆர்.பாலு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி வேட்புமனு தாக்கல் செய்தார்.
நெல்லை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி வேட்புமனு தாக்கல் செய்தார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன், அதிமுக வேட்பாளர் குமரகுரு வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ் பெருமாளுக்கு பிரமோற்சவத்தை நடத்தக் கோரி வழக்கு பதிவு. இதையடுத்து, பொது தீட்சிதர் குழு ஏப்ரல் 24க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்தாலும் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுதாக்கல் செய்தார். முன்னதாக, ராமநாதபுரம் எல்லையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அதோடு, அங்கேயே படிவத்தில் கையொப்பமிட்டார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் பழனியிடம் மனு தாக்கல் செய்தார். முன்னதாக, கலைஞர் அறிவாலயத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அமைச்சர் பொன்முடி தலைமையில் பேரணியாக வருகை தந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையில் சிவலிங்கத்தை தரிசிக்க சென்ற இருவர் உயிரிழப்பு. வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் சாதக பாதகங்கள் தெரியாமல் இன்ஸ்டா ரீல்ஸுக்காகவும், யூ ட்யூப் ஷார்ட்ஸ் போடவும் படையெடுப்பவர்களால் பாதிப்பு
நெல்லை, மயிலாடுதுறை வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரும் இன்று அறிவிக்கப்படுவார் என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்
சமயவிளக்கு திருவிழா: கைகளில் விளக்குகளுடன், ஆண்கள் பெண்களைப்போல உடையணிந்து கோவிலை வலம் வந்து வழிபடும் திருவிழாதான், சமயவிளக்கு திருவிழா..
Breaking LIVE : அயர்லாந்து பிரதமராகிறார் சைமன் ஹாரிஸ் .
டப்லின்: சைமன் ஹாரிஸ் (37) அயர்லாந்து நாட்டின் இளம்வயது பிரதமர் ஆகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், அயர்லாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகியதால் சைமன் பிரதமராகிறார்
கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவை கடத்தி வந்த இரண்டு வட மாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாங்குநேரியில் இன்று பிரச்சார மேற்கொள்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார். இதன் காரணமாக நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடையை மீண்டும் பிரதமராக்கவே ஆளிஉநர் பதவியை ராஜினாமா செய்தேன் என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் அரியணையில் அமர வைக்க பாஜகவினரோடு பணியாற்ற பதவி விலகினேன் என விளக்கம் அளித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்பமனு தாக்கல் செய்கின்றனர். குறிப்பாக ஓபிஎஸ், முருகன் உள்ளிட்டோர் வேட்பமனு தாக்கல் செய்கின்றனர்.
Background
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தரப்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடன்கினார். அங்கு நடைபெற்ற பொது கூட்டத்துல் கலந்துக்கொண்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று நாங்குநேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதாவது நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகிறார். இதன் காரணமாக நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோல் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து மக்கள நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 29 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார். 29 ஆம் தேதி- ஈரோடு, 30 ஆம் தேதி-சேலம், ஏப்ரல் 2 ஆம் தேதி- திருச்சி, 3 ஆம் தேதி -சிதம்பரம், 4 ஆம் தேதி- ஸ்ரீபெரும்புதூர், 7 ஆம் தேதி- சென்னை, 10 ஆம் தேதி- மதுரை, 11 ஆம் தேதி- தூத்துக்குடி, 14 ஆம் தேதி- திருப்பூர், 15 ஆம் தேதி- கோவை, 16 ஆம் தேதி- பொள்ளாச்சி என பட்டியலிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதிமுக கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மேலும், ஓபிஎஸ், முருகன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக மேல் விசாரணைக்காக அவரது சொத்து விவரங்களை கேட்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருகிறது.
மேலும் இன்று மிக முக்கியமாக 100 ஆண்டுகளுக்கு பின் பங்குனி உத்திர திருவிழாவின் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இன்று நிகழும் சந்திர கிரகணம் பெனும்பிரல் சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. அதாவது பகுதி சந்திர கிரகணம். இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -