TN Assembly 2024 LIVE: காங்கிரஸிடம் ரூபாய் 65 கோடி பாக்கி வசூல் - வருமான வரித்துறை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
போக்குவரத்து துறை தொழிலாளர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை வரும் மார்ச் மாதம் 6ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
சென்னை, வண்டலூர் பூங்காவில் வாழ்ந்து வந்த விஜயன் என்ற 21 வயதான ஆண் வங்கப்புலி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தது.
கோவையில் மெட்ரோ ரயில் நிலையம் கொண்டு வர அனுமதி தர மத்திய அரசு மறுக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
எண்ணூர் அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக ரூ.5.9 கோடி நிவாரணம் கேட்கப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
எண்ணூர் கோரமண்டல் உர தொழிற்சாலை அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
யானை தாக்குதல் தொடர்பாக உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்கப்படும் - அமைச்சர் மதிவேந்தன்
யானை தாக்கி உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. உயிர் சேதம் மட்டும் இல்லாமல் பயிர் சேதம், கால்நடை சேதமும் இருக்கிறது - அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்
நகராட்சிகளுக்கு என தனியாக 500 மருத்துவர்கள், செவிலியர்கள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அழைப்புகள் அனுப்பபட்டு நேர்காணல் மூலம் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. அதிமுக தலைமை அலுவலகத்தில் மார்ச் 1 வரை காளை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் பகுதியில் மெட்ரோ நிர்வாக வாகனத்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 6 பேரை கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் மெட்ரோ ரயில் ஊழியர்களை அழைத்து மெட்ரோ நிர்வாக வாகன கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அதிகாலை 4.17 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுகத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் ஏற்கனவே தொழிற்சங்கங்களுடன் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா ராஜன். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கியது. புலி உள்ளிட்ட வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணி பிப்ரவரி 27ம் தேதி வரை நடைபெறுகிறது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. மார்ச் 1 ஆம் தேதி வரை விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈச்சங்காடு மாத்தூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது. இரு மார்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேஜஸ், வைகை விரைவு ரயில் இன்று ஒரு நாள் மாற்று பாதையில் இயங்கும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பீடி இலை கடத்தியதாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த டிஜோ, சாட்கோ, அஸ்வின், மரிய அந்தோனி, அபிஷ்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்பட்டி கடற்படை தளத்தில் வைத்து 5 மீனவர்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Background
Petrol Diesel Price Today, February 21: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 21ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 641வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -