Breaking News LIVE, July 26: கூடங்குளம் அணுமின் நிலையம் வரலாற்றுச் சாதனை..!

Breaking News LIVE, July 26: தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Continues below advertisement

LIVE

Background

  • குறிப்பிட்ட 4 விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கட்டிட வரைபட அனுமதி ரத்து - தமிழக அரசு எச்சரிக்கை 
  • கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது
  • மனிதக் கழிவுகளை மனிதரே சுத்தப்படுத்துவதற்கு  விதிக்கப்பட்ட தடைச்சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
  • 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் பணியமர்த்த வேண்டும் - சீமான்
  • விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளதாக தகவல்
  • கார்கில் போர் வெற்றி தினம் - போர் நினைவிடத்தில் இன்று வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி
  • தொடர் கனமழையால் மும்பை, புனே நகரங்களை சூழ்ந்த வெள்ளம் - 7 பேர் உயிரிழப்பு
  • விமான கட்டண விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் - மத்திய அமைச்சர் உறுதி
  • முல்லை பெரியாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
  • ப்லிப்பைன்சில் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து 16 பேர் மீட்பு
  • எச்.ஐ.வி. தொற்றுக்கு புதிய மருந்து - தென்னாப்ரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்
  • கொலம்பியாவில் கால்பந்து மைதானம் மீது டிரோன் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி
  • எத்தியோப்பியாவில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 257 ஆக உயர்வு
  • இன்று கோலாகலமாக தொடங்குகிறது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் - கண்கவர் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு
  • ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் ஏராளமான கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு  - உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்
  • பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - இந்திய ஆடவர், மகளிர் அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதி
Continues below advertisement
21:55 PM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE, July 26: கூடங்குளம் அணுமின் நிலையம் வரலாற்றுச் சாதனை..!

கூடங்குளம் அணுமின் நிலையம் வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைந்துள்ள 2 அணு உலைகள் மூலம் செய்யப்படும் மின் உற்பத்தி ஒரு லட்சம் மில்லியன் யூனிட்டுகளை கடந்தது.
 
2013 ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் அணு உலையின் மூலம் 57030 மில்லியன் யூனிட் மின்சாரமும் 2016 ம் ஆண்டு தொடங்கப்பட்ட 2 வது உலையின் மூலம் 42993 மில்லியன் மின் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
20:40 PM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE, July 26: நிதி ஆயோக் கூட்டம்: புதுவை முதல்வர் புறக்கணிப்பு?

Breaking News LIVE, July 26: டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

20:33 PM (IST)  •  26 Jul 2024

செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணத்திற்கு ஆளுநர் இரங்கல்

செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணத்திற்கு ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

20:26 PM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE, July 26: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 81,552 கன அடியாக அதிகரிப்பு..!

Breaking News LIVE, July 26: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 81,552 கன அடியாக அதிகரித்துள்ளது. 

19:35 PM (IST)  •  26 Jul 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16:11 PM (IST)  •  26 Jul 2024

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை: ஜெகத்ரட்சகன் வேதனை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ஜெகத்ரட்சகன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து. 

இதுகுறித்த கூட்டத்தில் பேசிய அவர், “எத்தனையோ இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது முதலமைச்சருக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. தேர்தலில் அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் ஆறு மாதத்தில் செய்து கொடுப்போம். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு லட்சம் நிதி அளிப்பதாக வேண்டி கொண்டேன். ஆனால் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வேதனை அளிக்கிறது” எனக் கூறினார்.

16:08 PM (IST)  •  26 Jul 2024

காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
 
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு. 
 
கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 83,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. 
 
இதன் காரணமாக மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது. 
 
இதன் காரணமாக காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12:22 PM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE: 93 அடியை தாண்டிய மேட்டூர் அணை: ஓரிரு நாளில் அணை திறப்பு?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 59000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டும் 93 அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாளில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக அணை திறக்கப்பட உள்ளதால் வாய்க்கால்கள் தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

10:55 AM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE: கார்கில் போர் வெற்றி தினம்: முதல்வர் ஸ்டாலின் போட்ட பதிவு 

கார்கில் போர் வெற்றி தினத்தை போற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், “25 ஆம் தேதி கார்கில் வெற்றி தினத்தில், ஈடு இணையற்ற துணிச்சலுடன் நமது தேசத்தைக் காத்த நமது வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுகிறோம்.

நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வோம்” எனத் தெரிவித்துள்ளார். 

09:24 AM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE: கொடியேற்றத்துடன் துவங்கிய தூத்துக்குடி தூயபனிமய மாதா பேராலய திருவிழா

தூத்துக்குடி தூயபனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

08:41 AM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE: ஒகேனக்கல் நீர்வரத்து 70,000 கன அடியாக அதிகரிப்பு 

 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 62,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 56,000 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

08:21 AM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE: சென்னை கோயம்பேட்டில் காய்கறி நிலவரம் என்ன? முழு பட்டியல்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 26.07.2024

வெங்காயம் 38/35/30
தக்காளி 35/30/28
உருளை  45/40/30
சின்ன வெங்காயம் 80/60/50
ஊட்டி கேரட் 
110/100/90
 
பெங்களூர் கேரட் 40
பீன்ஸ் 70/65/60
பீட்ரூட். ஊட்டி 80/70
கர்நாடக பீட்ரூட் 25/20
சவ் சவ் 30/25
முள்ளங்கி 25/20
முட்டை கோஸ் 30/25
வெண்டைக்காய் 35/30
உஜாலா கத்திரிக்காய்
40/35
வரி கத்திரி 30/24
காராமணி 40/30
பாவக்காய் 40/30
புடலங்காய் 20/15
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கி 72/65
முருங்ககாய் 40/35
சேமகிழங்கு 40/30
காலிபிளவர் 50/40
வெள்ளரிக்காய் 25/20
பச்சை மிளகாய் 40/35
பட்டாணி 180/150
இஞ்சி 140/130/125
பூண்டு 250/230/120
அவரைக்காய் 60/50
மஞ்சள் பூசணி 20/15
வெள்ளை பூசனி.20
பீர்க்கங்காய் 35/30
எலுமிச்சை 110/100
நூக்கள் 50/40
கோவைக்காய் 30/20
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 8/5
வாழைதண்டு,மரம் 30/24
வாழைப்பூ 20/15
குடைமிளகாய் 60/50/40
வண்ண குடமிளகாய் 120
கொத்தமல்லி 2
புதினா .2
கருவேப்பிலை 25
கீரை வகைகள் 10
மாங்காய் 50/40
 தேங்காய் 28/27

07:59 AM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE: கனமழை: நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை 

 

நீலகிரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் உதகை, குந்தா வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

07:55 AM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE: ஜூலை 29 முதல் விலையில்லா சீருடை விநியோகம் 

 

பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 29ஆம் தேதி முதல் விலையில்லா சீருடை வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

2024 - 25ஆம் ஆண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படுகிறது. 

07:25 AM (IST)  •  26 Jul 2024

சென்னையில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை

 

சென்னை அண்ணாநகர் மற்றும் அண்ணை சத்யா நகரில் என 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீசிய பாலமுரளில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பாலமுரளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

07:22 AM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு - சேலத்தில் நடத்த திட்டமா?

 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை சேலத்தில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கட்சியின் நிர்வாகிகள் சேலம், ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் மாநாட்டிற்காக இடம் முடிவு செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

07:18 AM (IST)  •  26 Jul 2024

Breaking News LIVE: ஒகேனக்கல் நீர்வரத்து 62,000 கன அடியாக அதிகரிப்பு 

 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 62,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 56,000 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 62,000 கன அடியாக அதிகரித்துள்ளது.