Breaking News LIVE, July 22: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவருக்கு சீமான் வாழ்த்து
Breaking News LIVE, July 22: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின்புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி வழக்கறிஞர் ஆனந்தன் அவர்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தங்கை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
நம்முடைய தாத்தாக்கள் இரட்டைமலை சீனிவாசனார், அயோத்திதாச பண்டிதர், ‘புரட்சியாளர்’ சட்டமேதை அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் காட்டிய வழியில் பயணித்து, ஒடுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டிருக்கும் ஆதித்தமிழ்க்குடி மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் பாடுபடவும், மறைந்த அன்பிற்குரிய தம்பி ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களில் 4 பேருக்கு போலீஸ் காவல். ஹரிஹரனுக்கு 4 நாட்கள், மற்ற மூன்று பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல். பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோருக்கு 2 வது முறையாக போலீஸ் காவல்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை, ஜூலை 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
சேலம் கிழக்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நடிகர் சூர்யாவின் 49 வது பிறந்தநாளையோட்டி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 65 பேர் ரத்த தானம் செய்தனர்.
எம்.ஆர்.விஜயபாஸ்கரை 3 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இரண்டு நாள் சிபிசிஐடி கஸ்டடி வழங்கி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சொத்து மோசடி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், 3 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிபதியிடம் கடிதம் வழங்கி நிலையில் 2 நாட்கள் கஸ்டடி எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை, அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்; இந்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
"அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான தடையை இப்போது நீக்கியது ஏன்..?" -ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கேள்வி
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! 2026 பேரவை தேர்தலை எதிர்கொள்வது, கட்சியில் அமைப்பு நீதியாக சீரமைப்பை மேற்கொள்ள ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது!
நீட் முறைகேடு குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி.
நீட் முறைகேடுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் - மாணிக்கம் தாகூர்
"நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவியுள்ளதா? என்பதை உறுதிசெய்ய வேண்டும்; ஹசாரிபாக் மற்றும் பாட்னா ஆகிய 2 பகுதிகளில் வினாத்தாள் கசிவு என்பது உறுதி; தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் திருடப்பட்டுள்ளது" - நீட் தேர்வு முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
"தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது” - மக்களவையில் எம்.பி. அகிலேஷ் யாதவ் பேச்சு
“நீட் தேர்வு முறையில் சிக்கல்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்; பணம் இருப்பவர்களால் இந்திய தேர்வு முறையை விலைக்கு வாங்க முடிகிறது; அமைப்பு ரீதியாக சிக்கல்கள் உள்ள நீட் தேர்வு முறையை எப்படி சரி செய்யப்போகிறீர்கள்?” - ராகுல் காந்தி
"ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும்" - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்
"நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - மக்களவையில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி வலியுறுத்தல்
Neet Scam : Parliamentary Budget Session
நீட் முறைகேடு, போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கி விட்டது. தேர்வுக்கு பதிவு செய்வதில் இருந்து தொடங்கி அனைத்து படிநிலைகளிலும் முறைகேடு நடைபெறுகிறது - மக்களவையில் எம்.பி. பிரேமச்சந்திரன் பேச்சு
"நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன். இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடராக இருக்கும்" : பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி உரை
"2047- ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது; அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம்" - பிரதமர் நரேந்திர மோடி
2029-இல் தேர்தல் நடக்கும்போது அரசியல் நிகழ்வுகளை நடத்தலாம். தற்போது மக்கள் நலனே முக்கியம் - பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. சிறப்புப் பிரிவில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஜூலை 27ம் தேதி வரை நடைபெற உள்ளது; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29ம் தேதி தொடங்க உள்ளது; தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tneaonline.org என்ற முகவரியில் கலந்தாய்வு நடைபெறுகிறது!
அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு!
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் நினைவுதினம் இன்று!
தேவதாசி முறை ஒழிய காரணமானவர் முத்துலட்சுமி
பால்ய விவாக தடுப்புச் சட்டம் இயற்றக் காரணமானவர்
உடன்கட்டை ஏறுதலை மறுத்து மறுமணம் செய்யும் முறைக்கு ஆதரவளித்தவர்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தொடங்கக் காரணமானவர்
சென்னை மாகாணத்தில் முதல் பெண் சட்டமேலவை உறுப்பினர்
சூர்யா நற்பணி இயக்க தலைவர் பரமுவின் தந்தையின் மறைவுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய நடிகர் சூர்யா! கடந்த 7ம் தேதி அவர் உயிரிழந்த நிலையில் சென்னையில் நேற்று அவரின் 16ம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
கோவை சித்ரா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! கரும்புகை கிளம்பிய உடனே பேருந்து ஓட்டுநர் தாஸ் பேருந்தை நிறுத்திவிட்டு உள்ளே இருந்த 30 பயணிகளைப் பத்திரமாக வெளியேற்றியதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 74,000 கன அடியாக அதிகரிப்பு. நேற்று நிலவரப்படி வினாடிக்கு 65,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 74,000 கன அடியாக உயர்வு! நீர்வரத்து காரணமாக சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி, பரிசல் இயக்கவும், அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் 7வது நாளாக தடை நீட்டிப்பு!
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக கூடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 314 மில்லியன் கனஅடியாக உள்ளது.
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 124 மில்லியன் கனஅடியாக உள்ளது. வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறப்பு.
புழல் ஏரிக்கு நீர்வரத்து 65 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 2640 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 40.15% நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் - 41.07%
புழல் - 80%
பூண்டி - 4.52%
சோழவரம் - 11.47%
கண்ணன்கோட்டை - 62.8%
தொடரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் உதகை, குன்னூர், குந்தா மற்றும் கோத்தகிரி தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Background
- ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
- சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு - ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி
- நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்குகிறது
- வங்கதேசத்தில் இருந்து முதற்கட்டமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 44 மாணவர்கள் சென்னை திரும்பினர்
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக உயர்வு, மேட்டூர் அணைநீர்மட்டம் 70.8 அடியாக உயர்வு - டெல்டா பாசனத்திற்கு விரைவில் நீர் திறப்பு
- நெல்லை வழியாக இயக்கப்படும் அந்தியோதயா ரயில் வரும் 31ம் தேதி வரை ரத்து
- பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடங்கள் 665
- பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது மத்திய அரசின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்
- நீட் தேர்வு மோசடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
- மத்தியில் பாஜக தலைமயிலான கூட்டணி அரசு நீண்டகாலம் நீடிக்காது - மம்தா பானர்ஜி
- ராஜஸ்தான் - நீட் தேர்வில் 4 ஆயிரம் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றது அம்பலம் - மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு
- அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல பாஜக சதி செய்கிறது - ஆம் ஆத்மி
- அமெரிகக் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - ஜோ பைடன் அறிவிப்பு
- ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட வாய்ப்பு என எதிர்பார்ப்பு
- சீனாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- வங்கதேசத்தில் கலவரத்திற்கு காரணமான இட ஒதுக்கீட்டை குறைத்து அந்நாட்டு அரசு அறிவிப்பு
- இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ சார்பில் ரூ.8.5 கோடி நிதியுதவி - ஜெய் ஷா அறிவிப்பு
- சுவிட்சர்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நடால் தோல்வி - நேர் செட்களில் வென்று சாம்பியனானார் நுனோ போர்ஜெர்ஸ்
- டிஎன்பிஎல் கிரிக்கெட் சேலம் அணியை வீழ்த்தி திருப்பூர் எளிதில் வெற்றி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -