Breaking News LIVE, July 18: மனமொத்து பிரிவதாக அறிவித்த ஹர்திக் பாண்டியா
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காய்கறி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தண்ணீர் தேங்கியதால் செடிகள் அழுகத் தொடங்கியதாகவும் தெரிவித்தனர்
இலங்கை சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு
ரோஹித், கோலி இருவருமே ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர்
சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமனம்
ODI, T20 இரு தொடருக்கும் கில் துணை கேப்டனாக நியமனம்
சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை!
சென்னை : கோடம்பாக்கம், அடையாறு, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர், திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது
உத்தர பிரதேச ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது, இந்திய ரயில்வே. மேலும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு, ரூ. 50, 000 வழங்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
ஹிப்ஹாப் ஆதி தயாரிப்பாளராக அறிமுகமாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு 'கடைசி உலகப் போர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார் ஆதி. திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாகவுள்ளது!
சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், கோவை சித்திரைசாவடி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் என அடுத்த 2 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் கூடுதலாக 20,040 இடங்கள் அதிகரிப்பு என அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
Breaking News LIVE, July 18: உ.பி ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..4 பேர் உயிரிழப்பு
அப்பகுதியில் பயணிகளை மீட்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் முழுமையாக ரயில் சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 80, 000 புள்ளிகளை தாண்டியது.
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சந்தப்பேட்டை, சைலோம், கீரனூர், வடக்குநெமிலி, அத்தாண்டமருதூர், ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாகக் கன மழை!
நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு நாளை மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ம் தேதி பிற்பகல் வரை காலக்கெடு விதிப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகியான அஞ்சலை, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ₹10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல்.
கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததோடு, உளவு பார்க்கும் வேலையிலும் அஞ்சலை ஈடுபட்டுள்ளார். இந்த தொடர்பின் அடிப்படையில் அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்
நீலகிரி: சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழையால் ஊட்டி - அவலாஞ்சி சாலையில் ஒரே இடத்தில் 5க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு மரங்களுக்கு இடையே சிக்கிய காரில் இருந்த 2 பேர் உயிர்தப்பினர்
சசிகலா பயணம் அதிமுகவில் மாற்றங்களைக் கொண்டுவருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “கருவாடு மீன் ஆகாது, கறந்த பால் மடி புகாது” என்று கூறியிருக்கிறார்
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம்.
இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 84,119 குழந்தைகளை ரயில் நிலையங்களில், ரயில்களில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படை!
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 5.09 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3.42 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
தூத்துக்குடியில் சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம் ரூ.36,238 கோடி முதலீடு செய்கிறது. பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய Sojitz Corp, Kyushu Electric Power உடன் இணைந்து செம்ப்கார்ப் பணியை மேற்கொள்ள உள்ளது. பசுமை ஹட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஆரம்ப கட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இவ்வாண்டு தொடக்கத்தில் அரசுக்கும் செம்ப்கார்ப் நிறுவனத்துக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கறந்த பால் மடி புகாது என்று அ.தி.மு.க.வில் சசிகலாவை மீண்டும் சேர்க்கும் திட்டம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் இன்று பதவியேற்றார். அவருக்கு சக நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் வாழ்த்து கூறினர்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் இன்று பதவியேற்றார். அவருக்கு சக நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் வாழ்த்து கூறினர்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் இன்று பதவியேற்றார். அவருக்கு சக நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் வாழ்த்து கூறினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி மலர்கொடி சேகர் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு குறித்து தேசிய தேர்வு முகமை மையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 17 மாணவர்களின் தேர்வு முடிகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் சிறிய அளவிலேயே முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக பாட்னா எய்ம்ஸ் மருத்துவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40 அடியை தாண்டியது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வில் இந்தியா காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது, பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்துகிறது
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, பந்தலூர் மற்றும் கூடலூர் ஆகிய வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை
Background
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் தமிழ்நாட்டிற்கு வரும் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக உயர்வு
- நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்பு – வெள்ளத்தில் மிதக்கும் கூடலூர்
- கனமழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
- நீலகிரி, கோவை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- நீட் தேர்வு முறைகேடு வழக்குகள்; உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
- தக்காளி விலை கிடுகிடு உயர்வு; பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூபாய் 61க்கு விற்பனை
- கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு
- மத்திய அரசு கூறும் விலையையே தமிழக அரசு அறிவிக்கிறது – தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
- தமிழக அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று – லேசான அறிகுறி காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டார்
- பாரீசில் தொடங்க உள்ள ஒலிம்பிக் தொடருக்கு இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தீவிர பயிற்சி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -