Breaking News LIVE: சென்னை திரும்பிய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா - ரூ.30 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் பரிசு
Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் முதல் வாரத்தில் ஐரோப்பா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது” குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த திருமாவளவன், “நடிகர் பிரகாஷ்ராஜ் சொன்னது போல காந்தியை கொன்றவர்கள், அம்பேத்கரின் அரசமைப்பு சட்டத்தை சிதைக்கிறவர்கள் எப்படி ஜெய்பீம் படத்துக்கு விருது கொடுப்பார்கள்? என கூறியதை நான் வழிமொழிகிறேன்”. எல்லோரையும் பாராட்டையும் பெற்ற அந்த படத்திற்கு விருது கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாததற்கு, உங்களுக்கு இருக்கும் ஏமாற்றம்தான் எனக்கும் என கூறினார்.
ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 40 நாட்களில் பல ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்கியது சந்திரயான் 3 விண்கலம்.
ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, இரண்டாவது முழு நிலவு ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. சில வானியல் நிகழ்வுகள் காரணமாக இந்த ப்ளூ மூன் நிகழ்வு ஏற்படுகிறது. அதேபோல் சூப்பர் மூன் என்றால் சந்திரன் முழு நிலவு நாளன்று முன்பை விட சற்று பெரியதாகவும், முன்பு பார்த்ததை விட சற்று பிரகாசமாகவும் தோன்றும் (பூமியை நிலவு சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதை மிகவும் சிறியதாக இருக்கும்). மேலும் ஒரு சிறப்பம்சமாக இன்று வானில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது
சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி பொய் சொல்வதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்- சாட்டியுள்ளார்.
டெல்லியில் இருந்து கர்நாடக புறப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவின் அருணாச்சலபிரதேசத்தை உரிமைகோர சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி “லடாக்கில் ஒரு பிடி நிலத்தை கூட சீனா கைப்பற்றவில்லை என பிரதமர் மோடி கூறுவது பொய் என பல ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன்.
சீனா அத்துமீறி நடந்துகொள்வது லடாக்கில் உள்ள அனைவருக்குமே தெரியும். இந்த வரைபட பிரச்னை மிகவும் முக்கியமானது. இந்தியாவின் நிலத்தை அவர்கள் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி எதையாவது வாய்திறந்து பேச வேண்டும்” என கூறியுள்ளார்.
காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று (ஆகஸ்ட் 30 ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 44,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 5,530 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48,000 ஆகவும் கிராமுக்கு ரூ. 6,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ. 80.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700க்கு விற்பனையாகிறது.
சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலமாக இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்படவுள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் ஏவுதளத்தில் நிலை நிறுத்தம். செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் விநாயகா நகர் குடியிருப்பு பகுதியில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அரைக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அனைத்து வருகின்றனர்
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டம் தாளவடி அருகே தொட்டபுரத்தில் மக்காளச்சோள காட்டில் யானை தாக்கி பள்ளி மாணவர் சிபு மாதேஷ் படுகாயம் - தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிபு மற்றும் அவரது சகோதரர் இரவுநேர காவலுக்கு சென்ற இடத்தில் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் அரசு உதவிபெறும் பள்ளி அருகே மரம் விழுந்து மாணவி சுஷ்மிதா பலி - இரங்கல் தெரிவித்ததோடு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - பிற்பகல் 12.30 மணி முதல் குளிர்சாதன, நவீன சொகுசு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டம்
சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். பாடியநல்லூர், திரு.வி.க.நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்கிறார்.
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது - நேற்று (ஆகஸ்ட் 29) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.200 விலை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
Background
Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.
பெட்ரோல், டீசல்:
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இன்றைய விலை நிலவரம்
இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 30) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 466வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.
அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -