Breaking News LIVE: இன்னும் சற்று நேரத்தில் மகரஜோதி.. லட்சக்கணக்கான பக்தர்கள் கரகோஷம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 14 Jan 2023 06:07 PM
இன்னும் சற்று நேரத்தில் மகரஜோதி.. லட்சக்கணக்கான பக்தர்கள் கரகோஷம்

இன்னும் சற்று நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி ஏற்றப்பட உள்ளதால் பக்தர்கள் பரவசத்துடன் காத்துள்ளனர். 

Breaking News LIVE: சற்று நேரத்தில் மகர ஜோதி ஏற்றப்பட உள்ளது!

சபரிமலையில் மகர விளக்கு பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில், மகர ஜோதி ஏற்றப்பட உள்ளது.

Breaking News LIVE: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை கோலாகலம்

சரண முழக்கத்துடன் மகர ஜோதியை காண பக்தர்கள் காத்திருக்கின்றனர். மகர விளக்கு பூஜையை ஒட்டி சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படுகிறது.

Breaking News LIVE: செழிக்கட்டும் தமிழ்நாடு - மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், “ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும் தமிழ்நாடு! சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்! சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் கொண்ட சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம். மக்களின் நலன் காப்போம். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மீட்போம். ஜனநாயகப் பாதையில் பயணிப்போம்” என தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: சேவல் சண்டைகளுக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கிராமங்களில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி - மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு 

Breaking News LIVE: நீலகிரி, கோவை மாவட்டங்களில் உறைபனிக்கு வாய்ப்பு

இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்கைல் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

Breaking News LIVE: பொங்கல் பண்டிகை - தமிழ்நாட்டு மக்களுக்கு அமித்ஷா வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் ’இந்த அறுவடைத் திருநாள் உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் செழுமையையும் நிறைவையும் தருவதாக அமையட்டும்’ என தெரிவித்துள்ளார். 

Breaking News Live : தங்கம் விலை சவரனுக்கு ரூ.368 அதிகரிப்பு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ. 42,368 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு  ரூபாய் 46 உயர்ந்து ரூ.5,296 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 45,264 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,658 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Breaking News LIVE: காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,184 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - நிலை வேறுபாடின்றி மாதாந்திரபடி பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ரூ.400 வழங்கப்படும் எனவும் அறிவிப்பு 

Breaking News LIVE: தொடர் விடுமுறை எதிரொலி - இன்றும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு - மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 5 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்  எனவும், கடைசி ரயில் 12 மணிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு 

Breaking News LIVE: போகிப் பண்டிகை கொண்டாட்டம் - காற்றின் தரம் குறைகிறது..

போகிப்பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்ததால் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது - புகை மூட்டத்தால் சாலைகளில் பயணிப்போர் அவதி

Background

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்களுக்கு தேவசம் போர்டு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 


சபரிமலை ஐயப்பன் கோயில் 


கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்த இந்த முறை அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 


நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம், 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் தேவசம் போர்டு சார்பில் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. 


அதேசமயம் சன்னிதானம் பகுதியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 


மகரஜோதி தரிசனம்


மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து டிசம்பர் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14 ஆம் தேதியான இன்று மகரஜோதி நடக்கவுள்ள நிலையில், ஏற்கனவே நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கும் வகையிலான முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. இன்று மாலை 6.20 மணிக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். 


மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு பல பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். கடந்த 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.310 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேசமயம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து கடந்த ஜனவரி 12 ஆம் தேதி புறப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இன்று சபரிமலை வந்தடைகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு தங்க ஆபரணங்கள்  அணிவிக்கப்பட்டு இதன் பூஜைகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் நெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இன்றைய தினம் இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு


மகரஜோதி தரிசனம் முடிந்து விட்டு மலையிலிருந்து கீழிறங்கும் பக்தர்கள் மற்றவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இறங்க வேண்டுமெனவும், பிற பக்தர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் எனவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.