Breaking News LIVE: நேபாள் விமான விபத்து.. பயணிகளில் 5 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 15 Jan 2023 01:18 PM
நேபாள் விமான விபத்து.. பயணிகளில் 5 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது

நேபாள் விமான விபத்து.. பயணிகளில் 5 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது

Nepal Aircraft Crash: நேபாளில் பயங்கரம்.. 72 பேர் சென்ற விமானம்...ஓடுபாதையில் மோதி விழுந்து விபத்து...

Nepal Aircraft Crash: நேபாளில் பயங்கரம்.. 72 பேர் சென்ற விமானம்...ஓடுபாதையில் மோதி விழுந்து விபத்து...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை விலங்குகள் நலவாரிய அதிகாரி மிட்டல் நேரில் பார்வையிட்டுவருகிறார். தற்போது வரை 110 மாடு பிடி  வீரர்களுக்கு உடல் தகுதிப் பரிசோதனை செய்யப்பட்டு அதில் ஒரு மாடு பிடிவீரர் மது அருந்தி வந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட உள்ளார்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 1004 காளைகள், 318 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1004 காளைகள், 318 மாடுபிடி வீரர்களுடன் மொத்தம் 8 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு சுற்றுக்கு 25 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை- உலகப்புகழ் பெற்ற அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகை- உலகப்புகழ் பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. 

செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரெயில்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

செகந்திரபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 

கர்நாடக பட்ஜெட்: 17 ம் தேதி தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடக பட்ஜெட் அடுத்த மாதம் 17 ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு விமான நிலையம்: 2வது முனையத்தில் இன்றுமுதல் விமான சேவை..!

பெங்களூரு விமான நிலையத்தின் 2வது முனையத்தில் இருந்து இன்றுமுதல் விமான சேவை.

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே மாதத்தில் 60 ஆயிரம் பேர் பலி..!

சீனாவில் ஒரே மாதத்தில் கொரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். 

இன்று இந்தியா - இலங்கை கடைசி ஒருநாள் போட்டி.. யாருக்கு வெற்றி..?

இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா.. கடைசி ஒருநாள் போட்டியில் இன்று மோதல்

Background

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகி வருவது வாகன ஓட்டிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 


இன்றைய விலை


இதன் பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இச்சூழலில் பெட்ரோல், டீசல் விலை 239ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.


அதன்படி இன்று (ஜனவரி.15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இச்சூழலில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை கடந்துள்ளது.  


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.