Breaking News LIVE: கோயம்பேட்டில் லூலு மால் வரப்போகிறது என்பது வதந்தி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
மதுபானங்களின் மீதான கலால் வரி மீதான வரி உயர்த்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 375 மி.லி., 750 மி.லி., 1,000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபானங்கள் அந்தந்த ரகத்துக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு விற்கப்பட இருக்கிறது.
இதையடுத்து, வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயம்பேட்டில் லூலு மால் வரப்போகிறது என்பது வதந்தி என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
காவல்துறை மீது குற்றம் சாட்டிய விவகாரத்தில் நடிகர் இளவரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி விஜய் சவுத் பாதையில் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பேண்டு வாத்தியங்கள் இசைக்க வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் முப்படை வீரர்கள் பாசறை திரும்புகின்றனர்.
கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கிடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுக போட்டி நடப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். ஆளுநர் ரவிக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போன்று தெரிகிறது என அமைச்சர் ரகுபதி தனது அறிக்கையில் தெவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ரவீந்த்திர ஜடேஜா, கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜடேஜா, கே.எல்.ராகுல் ஓய்வு காரணமாக சர்ஃப்ராஸ் கான், சவுரப் குமார்,வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிமி அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். உபா சட்டத்தின் கீழ் சிமி அமைப்பு சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டதும் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.
மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக 4வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறது.
வழக்கு விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சல் செந்தில்பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பு வாதிட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு வழக்கு நிலுவையில் இருப்பதால் அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்க முடியாது என்றும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அமலாக்கத்துறை வாதிட்டது.
சங்கியை இழிவுப்படுத்தும் சொல்லாக பார்க்கின்றனர். அச்சொல்லை வைத்து பாஜகவினரை ட்ரோல் செய்வதாக பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு செல்லவிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரமின்மை காரணமாக வருகை ரத்து செய்யப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே மகாராஜா கடையில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு - உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு தொடர்பான வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர்
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதலாவது அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 4ஆம் தேதி மதிமுக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 3ஆம் தேதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 4ஆம் தேதியும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை தொடங்கியது. த.மா. க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடர்கின்றதா இல்லையா என்பது குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக தெரிய வாய்ப்புள்ளது.
அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது - இதனைத் தொடர்ந்து பிரச்சார குழு, விளம்பர குழுவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகளும் , பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர் , திருப்பத்தூர் இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை முதல் தென்மாவட்டங்கள் செல்லும் அனைத்து டிஎன்.எஸ்.டி.சி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Background
கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 29ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 619வது நாளாக தொடர்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -