Breaking News LIVE: நெல்லை ஆனைகுடி ராகெட் ராஜா வீட்டில் போலீசார் அதிரடி சோதனை; துப்பாக்கி பறிமுதல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் கிடங்கில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
நெல்லை ஆனைகுடி கிராமத்தில் ராக்கெட் ராஜா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்ஹே தமிழ்நாட்டிற்கு வருகின்றார்.
பல்லடத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர், நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'மோடியை தேர்ந்தெடுங்கள்' என்ற கருப்பொருளில் வீடியோ வெளியிட்டு பாஜக பரப்புரையை தொடங்கியது. பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், பயனடைந்த மக்கள் குறித்த காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
பட்டியலின இளம்பெண் துன்புறுத்தப்பட்ட வழக்கு : திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது
தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை எடுத்துள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
விருதுநகர் சாத்தூர் அருகே கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடித்து சிதறியதில் மீனம்பட்டியைச் சேர்ந்த அஜித் என்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Police Awards : குடியரசுத் தினத்தையொட்டி, சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு குடியரத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரீல்ஸ் வீடியோவுக்காக , அரசுப்பள்ளி மாணவர்கள் பேருந்துகளுக்கு மேல் ஏறி நடனம் ஆடிய வீடியோ வைரல்.
தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 21 பேருக்கு மெச்சத்தக்க சேவைக்கான விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது
தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனத்தை பார்ப்பதற்காக காலை முதல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்துள்ளார். ஜனவரி 18ஆம் தேதி தீக்காயங்களுடன் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பூர்ணிமா, இன்று உயிரிழந்திருக்கிறார்.
தைப்பூச கொண்டாட்டம் காரணமாக அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான கே.பி.அன்பழகனின் மருமகள் தீ விபத்தில் காயம் அடைந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தர்ம ஞானசபையில் கண்ணாடிக்கு முன் உள்ள ஏழு வண்ண திரைகள் நீக்கப்பட்டு ஜோதி காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகல கொண்டாட்டம் - அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Background
கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.
உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 25ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 615வது நாளாக தொடர்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -