Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே அறிந்து கொள்ளலாம்
LIVE

Background
- திருச்சி சிவா போன்றவர்கள் இருக்கும் வரை தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
- 75 ஆண்டுகள் ஆகியும் தி.மு.க. மாறவில்லை; தி.மு.க.வை எதிர்ப்பவர்கள்தான் மாறியுள்ளனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- எதிர்க்கட்சிகள் வதந்திகளை உண்மை போல கட்டமைக்க முயற்சிக்கின்றனர் – மு.க.ஸ்டாலின்
- நம்மிடம் உள்ள துணை முதலமைச்சர் சமத்துவத்தை பேசுகிறார்; இன்னொரு துணை முதலமைச்சர் சக்காரத்தை பேசுகிறார் – பவன் கல்யாண் குறித்து பிரகாஷ்ராஜ் விமர்சனம்
- உதயநிதியின் சாம்ராஜ்யம் ஒவ்வொரு செங்கல்லால் கட்டப்பட்டது அல்ல; ஒரே செங்கல்லில் கட்டப்பட்டது – வைரமுத்து பாராட்டு
- சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் விமான சாகசம் – காலை முதலே குவிந்த பொதுமக்கள்
- இனப்படுகொலை நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமுருகன் காந்தி வேண்டுகோள்
- சென்னையில் இருந்து ஓமன் செல்லும் விமானத்தின் டயர் வெடித்து கோளாறு – விமானம் புறப்படுவதில் தாமதத்தால் பயணிகள் அவதி
- காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் வலியுறுத்தியதாக சௌமியா அன்புமணி பேச்சு
- பொள்ளாச்சி அருகே முறையான அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகத்திற்கு சீல் – மனநல நோயாளிகள் அங்கீகரிக்கப்பட்ட மனநல காப்பகத்திற்கு மாற்றம்
- கன்னியாகுமரி மணவாளக்குறிச்சியில் அரிய வகை மணல் ஆலை அமைக்க எதிர்ப்பு – பெண்கள் திரளாக திரண்டு பேரணி
- மாமல்லபுரம் அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது புகார் – மீனவ மக்கள் போராட்டம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக பாகிஸ்தான் செல்லும் போது இரு நாடுகள் உறவு குறித்து பேச மாட்டேன் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
- பொக்ரானின் குறுகிய தூர இலக்குகளை தாக்கும் 3 வான் ஏவுகணைகள் சோதனை வெற்றி
- தலித்துகளின் வரலாறு புத்தகங்களில் இருந்து நீக்கப்படுகிறது – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து
- உத்தரபிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் இருமபு கம்பிகளை வீசியவர் கைது
- மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி; வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
- மகளிர் டி20 போட்டியில் இன்று பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா; வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து மற்றொரு போட்டியில் மோதல்
- டி20 தொடரில் இந்தியா – வங்கதேசம் முதல் போட்டி இன்று தொடக்கம்
ஏர் ஷோ வந்துட்டதால எல்லாரும் அங்க போயிட்டாங்க : ஜெயக்குமார்
"வழக்கமா நம்ம கூட்டம் நடத்துனா குறைஞ்சது 1000 பேர் வருவாங்க.. இன்னைக்கு திடீர்னு ஏர் ஷோ வந்துட்டதால எல்லாரும் அங்க போயிட்டாங்க.." அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
Biggboss Tamil season 8 : பிக்பாஸ் சீசன் 8 தமிழின் முதல் ப்ரோமோ வெளியானது
View this post on Instagram
2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் - ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரியில் தீபாவளிக்கு முன்னதாக அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்படும். தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் - ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
ஞாயிறு அட்டவணைப்படி குறைவான ரயில்களே இயக்கப்படுவதால் MRTS ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு
சென்னை மெரினாவில் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி, தெற்கு ரயில்வே போதிய ரயில்களை இயக்காததால் வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் ஞாயிறு அட்டவணைப்படி குறைவான ரயில்களே இயக்கப்படுவதால் MRTS ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தை பார்க்க காலை முதல் குவிந்த மக்கள்
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையின் சாகசத்தை பார்ப்பதற்கு காலை முதல் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.