Breaking News LIVE: பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் புதுச்சேரி - கடலூர் போக்குவரத்து பாதிப்பு
Breaking News LIVE: தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.
சுகுமாறன்
Last Updated:
03 Dec 2024 12:41 PM
பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் புதுச்சேரி - கடலூர் போக்குவரத்து பாதிப்பு
வெள்ளப்பெருக்கால் புதுச்சேரி - கடலூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு! அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரே நாளில் 9.5 செ.மீட்டர் மழை
சேலம் வாழப்பாடியில் 9.5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Background
- ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழையால் வெள்ளத்தில் தத்தளித்து வரும் விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி
- விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரியில் மீட்பு பணிகள் தீவிரம்
- வெள்ளத்தால் அவதிக்கு ஆளாகிய விழுப்புரம் மாவட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர்
- வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் அவதி
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்சாரம் இன்றி தவிப்பு
- கடலூரில் அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டதால் நோயாளிகள் பெரும் அவதி
- ஃபெஞ்சல் புயலால் 14 மாவட்டங்களில் 1.5 கோடி மக்கள் பாதிப்பு – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- ஃபெஞ்சல் புயல் பாதிப்பிற்கு தமிழ்நாட்டிற்கு உடனடியாக 2 ஆயிரம் கோடி வழங்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- திருவண்ணாமலையில் மண் சரிவில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்பு – 2 பேரின் உடலை தேடும் பணி தீவிரம்
- திருவண்ணாமலையில் மீட்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி – இன்று மாலைக்குள் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்
- திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்தது நெஞ்சை பதற வைக்கிறது – விஜய் இரங்கல்
- சாலையில் தேங்கிய மழைநீரால் விழுப்புரம் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
- கள்ளக்குறிச்சி தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
- தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- டிசம்பர் மாதத்தில் தென் மாநிலங்களில் இயல்பை விட அதிக மழை பெய்வதற்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, ஊத்தங்கரையிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை
- - - - - - - - - Advertisement - - - - - - - - -