FM Nirmala Sitharaman: அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது வரை பொதுவெளியில் எங்கும் பேசவில்லை.

வரியை குவிக்கும் அமெரிக்கா:

இந்தியா மிக அதிகமாக வரி விதிக்கும் நாடாக இருப்பதோடு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி, உள்நாட்டிலிருந்து அமெரிக்காஇற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவிகித வரியை அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பான வணிகம் 40 முதல் 50 சதவிகிதம்  வரை வீழ்ச்சி காணலாம் என தொழில்துறையினர் அச்சம் கொண்டுள்ளனர். குறிப்பாக ஜவுளித்துறை, கனிம வேதிப்பொருட்கள், ரத்தினங்கள், நகைகள் உள்ளிட்ட பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்த சுழல் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுவெளியில் எங்குமே பேசாதது பலரையும் அதிருப்தியடைய செய்துள்ளது.

நிதியமைச்சர் எங்கே?

பட்ஜெட் உரை, புதிய வரி திருத்தங்கள், தினசரி பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு, தொழில்துறையினருடன் உரையாடல்,  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு கிண்டலாக பேசி பதிலடி தருவது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எப்போதும் தீவிரமாக இருப்பார். குறிப்பாக தமிழ்நாடு அரசியல் ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால் முதல் ஆளாக வந்து குரல் கொடுப்பார். ஆனால், கடந்த சில வாரங்களாகவே நிர்மலா சீதாராமன் மிகவும் சைலண்ட் மோடில் உள்ளார். அவருடன் சேர்ந்து பல மூத்த அமைச்சர்களும் அண்மைக்காலமாக பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாவிட்டாலும், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை குறித்து நிதியமைச்சர் பேசியிருக்க வேண்டாமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதி சரிவது நாட்டின்பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டாரா? எனவும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

தொழில்துறையினருக்கு பதில் தருவது யார்?

ஜுலை 31ம் தேதி அறிவிக்கப்பட்ட வரி விகிதங்கள் இன்று முதலும், கூடுதல் வரி விகிதங்கள் ஆகஸ்ட் 27ம் தேதி முதலும் அமலுக்கு வரவுள்ளன. இந்த புதிய வரி விகிதங்களால் அதிகரிக்கும் விலையால், இந்திய பொருட்களை அமெரிக்க மக்கள் வாங்குவது குறையும். இதனால், தேவை சரிந்து அமெரிக்காவிற்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி குறையும். அதன் விளைவாக உள்நாட்டு ஏற்றுமதி திறன் குறைந்து, அதை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் முற்றிலும் பாதிக்கப்படலாம். ஏற்கனவே ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொழில்துறையினர் சிரமப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் வரியும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது,. அவர்களுக்கான பதில்களை சொல்ல வேண்டிய நிதியமைச்சரோ இந்த விவகாரத்தை கண்டுகொள்வதை போன்றே தெரியவில்லை என்பதே பலரின் வேதனையாக உள்ளது.

ஆக்‌ஷன் வருமா?

தொழில்துறையினரின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? வரி தொடர்பாக ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விளக்கம் ஏதேனும் வருமா? கூடுதல் வரி விதிப்பின் தாக்கத்தையும், பாதங்கங்களையும் குறைக்க அரசு ஏதேனும் சலுகைகள் வழங்குமா? என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நோக்கி எழுப்ப பல கேள்விகள் உள்ளன. ஆனால், அவர் அண்மை காலமாக சைலண்ட் மோடிலேயே இருப்பது? தொழில்ந்துறையினரை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொறுப்பு அமைச்சராக தாமாக முன்வந்து பொருளாதார சூழல் குறித்து, அமெரிக்காவின் வரி நடவடிக்கையால் உள்நாட்டு பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள், அதனை சமாளிக்க அரசின் கைவசம் உள்ள திட்டங்கள் என எதைகுறித்தும் நிதியமைச்சர் தற்போது வரை பேசியதாக தெரியவில்லை.